SBI Vs Axis Bank: எங்கே loan வாங்கலாம்? வட்டி விகிதங்கள் எப்படி? இங்கே தெரிந்து கொள்ளலாம்!!

மற்ற வங்கிகளைப் போலவே மிகக் குறைந்த கட்டணத்தில் வீட்டுக் கடன்களையும் வழங்க Axis Bank முன்வந்துள்ளது. வங்கியின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்களுக்கு 6.90 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் கிடைக்கும். பண்டிகை காலங்களில் தொடங்கப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வங்கி இந்த முயற்சியை எடுத்துள்ளது.

SBI ஏற்கனவே வீட்டுக் கடனிலும் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடிகளிலும் வாடிகையாளர்களுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது.

1 /6

இதற்கு முன்னர், நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கி SBI தனது டிஜிட்டல் வங்கி தளமான யோனோவின் (Yono App) வாடிக்கையாளர்களுக்கு ஒரு பண்டிகை சலுகையை வழங்கியது. இதன் கீழ், வீட்டுக் கடன், கார் கடன் அல்லது யோனோவிலிருந்து பிற கடன் மீதான செயலாக்கக் கட்டணங்களுக்கு 100% தள்ளுபடி வழங்கப்படுகிறது. யோனோ என்பது வங்கியின் மொபைல் வங்கி செயலியாகும்.

2 /6

கார் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விகிதமான 7.5 சதவீதத்திலிருந்து தொடங்கி கடன்களை வழங்குவதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில், வாகனத்தின் வரி கூட்டிய விலையிலும் (சாலை விலையில்) அவர்களுக்கு கடன் வழங்கப்படும்.  

3 /6

மறுபுறம், Axis Bank-ன் இந்த விகிதங்கள், வங்கித் துறையின் முன்னணி வங்கியான SBI-யின் 6.95 சதவீத சலுகையை விட குறைவாக உள்ளது. அதே நேரத்தில், கோடக் மஹிந்திரா வங்கி வீட்டுக் கடனுக்காக 7 சதவீதத்தை வழங்கியுள்ளது.  

4 /6

கட்டுமானத் துறையில் COVID-19 தொற்றுநோய்க்கு முன்னரே, விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ரியல் எஸ்டேட் துறையின் கடன் வளர்ச்சி 6 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

5 /6

Axis Bank-ன் ‘பரந்த மனதுடன் கொண்டாட்டம்’ என்ற பிரச்சாரத்தின் கீழ், வீட்டுக் கடனுக்கான 6.90 சதவீத வட்டி விகிதத்தை ஆக்சிஸ் வங்கி அளிக்கிறது. இதன் கீழ், வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் கீழ் பொருட்களை வாங்கும் போது தள்ளுபடிகள் கிடைக்கும்.  

6 /6

இந்த பண்டிகை கால பிரச்சாரத்தில் கார் கடன் 7.99 சதவீதம் என்ற விகிதத்தில் கிடைக்கும். இதில், வாகனத்தின் சாலை மதிப்பில் 100 சதவீத கடன் வழங்கப்படும். அதே நேரத்தில், தனிநபர் கடன் 10.49 சதவீதத்திலும், கல்வி கடன் 10.50 சதவீதத்திலும் கிடைக்கும்.