புத்தாண்டில் PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: 5 புதிய விதிகள்... சுலபமாகும் செயல்முறை, அதிகரிக்கும் வசதி

EPFO New Rules 2025: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய செய்தியை வழங்கியுள்ளது. EPFO அதன் சந்தாதாரர்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

EPFO New Rules: இந்த புதிய விதிகள் மற்றும் மாற்றங்களால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள். இந்த புதிய விதிகள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகளின் முக்கிய நோக்கம், PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிக வசதியை வழங்குவதும், அவர்களின் ஓய்வூதிய நிதியை சிறந்த முறையில் நிர்வகிப்பதும் ஆகும். இந்தப் புதிய விதிகளைப் பற்றி விரிவாக காணலாம்.

1 /10

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்காக EPFO ​​ஒரு புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் உறுப்பினர்கள் இப்போது தங்கள் இபிஎஃப் தொகையை (EPF Amount)  ஏடிஎம்மில் இருந்து எடுக்க முடியும். இந்த வசதி 2025-26 நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி உறுப்பினர்கள் தங்கள் வைப்புத்தொகையை இரவு, பகல் என எந்த நேரத்திலும் எடுக்க முடியும். முன்பு வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கு 7 முதல் 10 நாட்கள் ஆகும். இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப எளிதாகவும் விரைவாகவும் பணம் எடுக்க உதவும்.  

2 /10

இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? பிஎஃப் பணத்தை திரும்பப் பெறும் செயல்முறை எளிதாகவும் வேகமாகவும் இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) நேரம் மிச்சமாகும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.

3 /10

இபிஎஃப்ஓ மூலம் ஊழியர்களுக்காக மற்றொரு முக்கியமான மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் அடிப்படையில் ஈபிஎஃப்க்கு பங்களிக்க முடியும். தற்போது ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் 12% மட்டுமே EPF-க்கு பங்களிக்கின்றனர். இந்த மாற்றம் EPFO ​​ஆல் நிர்ணயிக்கப்பட்ட ரூ.15,000க்கு பதிலாக அவர்களின் அசல் சம்பளத்தின் அடிப்படையில் பங்களிப்புகளை அனுமதிக்கும். ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்குவது மற்றும் அவர்களின் ஓய்வூதிய நிதியை மிகவும் பயனுள்ள முறையில் அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

4 /10

சாத்தியமான நன்மைகள் என்ன? பணியாளர் பங்களிப்பு வரம்பை அதிகரிப்பதால் ஓய்வுக்குப் பிறகு பெரிய ஓய்வூதிய நிதி கிடைக்கும். ஓய்வூதியம் அதிகரிக்கும். சிறந்த முதலீட்டு விருப்பங்களையும் ஊழியர்கள் பெறலாம்.

5 /10

EPFO அதன் IT உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இது PF தொகையை க்ளெய்ம் செய்பவர்களும் பயனாளிகளும் தங்கள் வைப்புத்தொகையை குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். ஐடி மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 /10

இதன் நன்மைகள் என்ன? IT மேம்பாட்டின் மூலம் க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும். வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். மோசடி வழக்குகள் குறையும்.

7 /10

EPFO தனது உறுப்பினர்களை எதிர்காலத்தில் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் நிதியை சிறந்த முறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வூதிய நிதியை சிறந்த முறையில் நிர்வகிக்க மற்றொரு விருப்பத்தை வழங்கும். இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் அதிக நன்மைகளைப் பெற முடியும்.

8 /10

இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? ஈக்விட்டியில் முதலீடு செய்வதால் அதிக வருவாய் வரக்கூடும். போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தலால் சிறந்த வருமானம் பெறலாம். நீண்ட காலத்திற்கு இது சிறந்த வளர்ச்சியை அளிக்கும்.

9 /10

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO ​​மற்றொரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இதில் ஓய்வூதியம் பெறுவோர் இனி எந்த கூடுதல் சரிபார்ப்பும் இல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் ஓய்வூதியத்தைப் பெற முடியும். ஓய்வூதியம் பெறுவோர் இனி எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் சென்று எந்தவித சிக்கலும் இல்லாமல் ஓய்வூதியம் பெறலாம். இந்த வசதி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, விரைவாகவும் எளிதாகவும் ஓய்வூதியத்தைப் பெற உதவும்.

10 /10

இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? ஓய்வூதியம் பெறுவதில் அதிக வசதி, நேரம் மிச்சமாகும், எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியத்தை எடுக்க சுதந்திரம் கிடைக்கும்.