Valentine’s Day 2021: அரசியல் தலைவர்களின் அன்பான காதல் கதைகள்

Valentine’s Day 2021: இன்று காதலர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. நம் வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களில் காதலும் ஒன்றாகும். சமூக சேவைக்காகவும், கட்சிப் பணிகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு கூட காதல் வருமா? 

கண்டிப்பாக வரும். உணையான காதல் ஒருபோதும் எதற்கும் தடையாகாது, முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவே இருக்கும் என்பதை இந்த அரசியல் தலைவர்களின் காதல் கதைகள் நமக்குக் காட்டுகின்றன.

1 /5

அகிலேஷ் மற்றும் அவரது மனைவி டிம்பிளின் காதல் கதையும் மிகவும் சுவாரசியமானது. அகிலேஷ் மற்றும் டிம்பிள் வேறுபட்ட பின்னணியிலிருந்து வந்தவர்கள். அகிலேஷ் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர், டிம்பிளின் தந்தை இந்திய ராணுவத்தில் கர்னல். அகிலேஷும் டிம்பிளும் ஒரு பொதுவான நண்பர் மூலம் சந்தித்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலைப் படிப்பை முடித்த அகிலேஷ் திரும்பினார், டிம்பிள் லக்னோ பல்கலைக்கழகத்தில் வணிகப் படிப்பைத் தொடர்ந்தார். டிம்பிளின் பெற்றோர் அவரது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ் இவர்களது காதலுக்கு எதிராக இருந்தார். இறுதியில் அவரது ஒப்புதலும் கிடைத்து இருவரும் நவம்பர் 24, 1999 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

2 /5

அரவிந்த் மற்றும் சுனிதா ஆகியோர் நாக்பூரில் உள்ள இந்திய வருவாய் சேவைகள் அகாடமியில் ஒன்றாகப் படித்தனர். அரவிந்த் மென்மையான, எளிமையான மனிதர். அவரது எளிமையும், புத்தி கூர்மையும் அவரை சுனிதாவின் பக்கம் ஈர்த்தன. அரவிந்த் தனது வேலையில் காட்டும் நேர்மையையும், நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அவரது ஆர்வத்தையும் பார்த்து சுனிதா அவரை விரும்பத் தொடங்கினார். அவர்கள் முதலில் நல்ல நண்பர்களாக மாறினர். ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 1994 இல் அவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. 1994 நவம்பரில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

3 /5

தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராவார். மக்களுக்கு பிடித்தமான முதல்வர் என பெயர் எடுத்தவர் தேவேந்திரா. தேவேந்திரா-அம்ருதாவின் காதல் கதை மிகவும் வித்தியாசமானது. இருவரும் முதலில் ஒரு நண்பரின் வீட்டில் சந்தித்தனர். சந்தித்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்களாம். தேவேந்திரா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அம்ருதாவிடம் கேட்டதாகவும் அதற்கு அவரும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தேவேந்திராவும் அம்ருதாவும் 2005 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திவிஜா என்ற மகள் உள்ளார்.

4 /5

சச்சின் பைலட் மற்றும் சாராவின் காதல் கதையும் திரைப்படங்களில் நாம் காண்பது போன்ற ஒரு இனிமையான காதல் கதையாகும். சச்சின் மற்றும் சாரா இருவரும் அரசியல் ரீதியாக வலுவான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட். சாரா பைலட் ஜம்மு காஷ்மீரின் மிகப் பிரபலமான, நேஷனல் கான்ஃபிரன்ஸ் தலைவர் ஃபாரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் உமர் அப்துல்லாவின் சகோதரியுமாவார். லண்டனில் தான் சாராவும் சச்சினும் ஒருவரை ஒருவர் முதன்முதலில் சந்தித்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் முதலில் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். 2004 ஆம் ஆண்டு இருவரும் ஒரு எளிமையான திருமண நிகழ்வில் மணம் புரிந்து கொண்டனர். தற்போது இரு குடும்பங்களும் இவர்களை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

5 /5

மிலிந்தும் பூஜாவும் 2004 இல் ஒரு போட்டோஷூட்டில் ஒருவரை ஒருவர் முதலில் சந்தித்தனர். சில ஆண்டுகள் டேட்டிங் செய்த இருவரும், 2008 இல் திருமணம் செய்து கொண்டனர். மிலிந்த் மும்பையைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் அரசியல்வாதியான முரளி தியோராவின் மகன். பூஜா திரைப்படத் தயாரிப்பாளர் மன்மோகன் ஷெட்டியின் மகள். அவர் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “வாக் வாட்டர் மீடியா” க்குத் தலைமை தாங்குகிறார். இவர்களது காதல் கதையும் திரைப்படங்காளில் நாம் காணும் அழகிய காதல் கதைகளைப் போல இருந்தது.