Amarnath Pilgrimage: அமர்நாத் யாத்திரையில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்

Amarnath Yatra 2022: புனித அமர்நாத் யாத்திரை 2022 ஜூன் 30 ஆம் தேதி துவங்கியது. இதுவரை 70 ஆயிரம் பேர் அமர்நாத் லிங்கத்தை தரிசித்துள்ளனர். இந்த புனித யாத்திரையில் முக்கியமாக தரிசிக்க வேண்டிய 5 இடங்கள் உண்டு. அவை அனைத்தையும் சென்று வணங்கினால்தான் புனித யாத்திரை பூர்த்தியாகும்.

அமர்நாத் குகையில், அழியாமையின் ரகசியத்தை அன்னை பார்வதிக்கு, சிவபெருமான் கூறியதாக நம்பப்படுகிறது.

1 /6

சிவபெருமான் அன்னை பர்வதத்திற்கு அழியாமை பற்றிய உபதேசத்தை சொல்ல தனிமையான இடத்தைத் தேடி சென்றபோது, நந்திதேவர் இங்கே இருந்தார். இந்த இடம் பஹல்கம் என்று அழைக்கப்பகிறது அமர்நாத் யாத்திரை இங்கிருந்து தொடங்குகிறது.

2 /6

அமர்நாத் யாத்திரையின் அடுத்த நிறுத்தம் சந்தன்வாடி. பஹல்காமில் நந்தியை விட்டுச் சென்ற சிவபெருமான், சந்தன்பரியில் தனது முடியிலிருந்து சந்திரனை அகற்றி இந்த இடத்தில் விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் அவர் நெற்றியில் இருந்த சந்தனமும் அப்போது இங்கே விழுந்தது. எனவே இந்த இடம் சந்தன்வாடி என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒவ்வொரு துகளிலும் சிவபெருமானின் சந்தனம் கலந்திருப்பதாக நம்பிக்கை. 

3 /6

பிஸ்ஸா பள்ளத்தாக்கில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது.  தேவர்களும், அசுரர்களும் சிவனை தரிசிக்க வரும் போது, ​​இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. தேவர்கள் அசுரர்களை அழித்தனர். இந்த இடத்தில் பயணிப்பவர்களின் வேகம் மட்டுப்படும் என்பது நம்பிக்கை.   

4 /6

அமர்நாத்துக்கு செல்லும்போது இங்குள்ள ஏரியில் தனது கழுத்தில் இருந்த பாம்பை சிவன் கழற்றி விட்டதாக நம்பிக்கை. இப்போதும் இந்த ஏரியில் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை நாகம் தோன்றுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த ஏரி நாகத்தின் வடிவில் உள்ளது என்பது சிறப்பு.

5 /6

மகாகணேஷ் பர்வத் என்ற இடத்தின் அழகு மனதை மயக்குவதாக இருக்கிறது. பச்சை நிறத்தால் சூழப்பட்ட இந்த மலையின் வடிவம் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அமர்நாத்துக்கு செல்லும்போது சிவபெருமான் தன் மகன் விநாயகரை இத்தலத்தில் அமரச் செய்ததாக ஐதீகம். இதனாலேயே இத்தலம் மகாகணேஷ் பர்வத் என்று அழைக்கப்பட்டது.

6 /6

பஞ்சதர்ணி என்ற இடம் அமர்நாத் புனிதயாத்திரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், சிவபெருமானின் முடியின் அடையாளமாக ஐந்து வெவ்வேறு நதிகள் இங்கு ஓடுகின்றன. மகாதேவரின் முடி ஐந்து திசைகளில் பரவியதாக கூறப்படுகிறது. அவை நீரோடைகளாக மாறியது. இந்த இடத்தைக் கடந்த பிறகுதான் பக்தர்கள் அமர்நாத்தில் உள்ள சிவனை தரிசிக்க முடியும்.