ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கவிஞர் வைரமுத்து நிதியுதவி!

  • Jan 30, 2018, 19:29 PM IST
1 /10

விழாவில் கவிஞர் அவர்களின் உரை! செம்மொழிக்கான தகுதிகள் என்று அறிவுலகம் வகுத்திருக்கிற அத்தனை தகுதிகளையும் கொண்ட பெருமை தமிழ் மொழிக்கு உண்டு.

2 /10

தமிழ் செம்மொழியென்று எப்போது அறிவிக்கப்பட்டதோ அப்போதே உலகப் பல்கலைக்கழகங்களின் இருக்கைகளில் அமரும் தகுதியைப் பெற்றுவிட்டது. 

3 /10

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் இருக்கையில் தமிழ் அமரும் காலம் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது.

4 /10

ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழைமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. 

5 /10

382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை.

6 /10

இந்தியப் பண்பாட்டின் சரிபாதியை வகுத்துக்கொடுத்தது தமிழ். 

7 /10

வடமொழி இலக்கியங்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்ய ஒரு மாக்ஸ் முல்லர் கிடைத்ததுபோல், அகிலத்திற்குத் தமிழை அறிமுகம் செய்ய இந்தத் தமிழ் இருக்கை

8 /10

சென்னைப் புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு விற்பனையாகும் என் நூல்களின் மொத்தத் தொகையை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கைக்குத் தருகிறேன்.

9 /10

மொத்த விற்பனைத் தொகை 4 லட்சத்து 61 ஆயிரத்து 370 ரூபாய். அந்தத் தொகையை முழுமை செய்து 5 லட்சம் ரூபாயாக வழங்குகிறேன்!

10 /10

தமிழால் ஈட்டிய சிறுபொருள் தமிழுக்குப் பயன்படுகிறதே என்று நெஞ்சு நிறைகிறது!