Dilute Bad Cholestol With Yogas: உங்கள் உடலில் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொண்டு கரைய மாட்டேன் என்று அடம் பிடிக்கும் கொலஸ்ட்ராலை எப்படி கட்டுப்படுத்தலாம்?
சிறப்பு யோகாசனங்கள் இருக்க கவலை ஏன்?
ரத்த நாளங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரையமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா?
உடலின் ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க தொடர்ந்து யோகா பயிற்சி செய்யலாம். சில பயனுள்ள யோகாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்
சர்வாங்காசனம் யோகாசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் உடலின் அனைத்து பாகங்களும் சிறந்த முறையில் செயல்பட முடியும். இதில், முழு உடலையும் தோள்களில் சமநிலைப்படுத்த வேண்டும். இந்த ஆசனம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதனால்தான் இது 'ஆசனங்களின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது. உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், இந்த யோகாவைத் தவறாமல் பயிற்சி செய்யுங்கள்.
தோள்கள் மற்றும் கைகளை வலுப்படுத்த ஷலபாசன யோகாவை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யலாம். இது வயிற்று தசைகளை நீட்டுகிறது. செரிமானத்தை மேம்படுத்தும் இந்த யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்தால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். கூடுதலாக, செரிமானத்தை மேம்படுத்த, உறுப்புகளைத் தூண்டுவதற்கு இது உதவியாக இருக்கும்.
இந்த யோகாசனத்தில் உடலில் இருக்கும் நச்சுக்களை குறைக்கலாம். மேலும், இந்த யோகா உங்கள் அதிகரித்து வரும் எடையை குறைக்க உதவியாக இருக்கும். இது மட்டுமின்றி, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. கபால்பதியை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம். இது வயிற்று உறுப்புகளைத் தூண்டுகிறது மற்றும் செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க சக்ராசன யோகா பயிற்சி செய்யலாம். இந்த யோகா வயிற்று உறுப்புகளை மசாஜ் செய்கிறது, இது மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும். இது தவிர, அதிகப்படியான கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபட இது மிகவும் பயனுள்ள யோகா போஸ்களில் ஒன்றாகும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைத் தூண்டுவதற்கு பச்சிமோத்தாசனம் உதவியாக இருக்கும். உடல் பருமனையும் குறைக்க உதவும் பச்சிமோத்தாசனம், தொப்பை கொழுப்பை போக்கவும் உதவும்.. உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க விரும்பினால், கண்டிப்பாக இந்த யோகாவைப் பயிற்சி செய்யுங்கள்.