IND vs BAN : அஸ்வின் சதம் அடித்து சேப்பாக்கம் மைதானத்தில் அபார சாதனை

Ravichandran Ashwin : வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து அபார சாதனை படைத்துள்ளார்.

India vs Bangladesh Test match highlights : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக ஆடி சதமடித்தார்.

1 /9

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

2 /9

அதன்படி, பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. ரோகித், விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் மோசமான ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

3 /9

இருப்பினும் ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால் சிறப்பாக ஆடி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் 39 ரன்கள் எடுத்தார். இருவரும் மிடில் ஆர்டரில் அமைத்து சிறிய பார்ட்னர்ஷிப் இந்திய அணியை மோசமான இடத்தில் இருந்து நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.

4 /9

அதன்பின்னர், பின் வரிசையில் இறங்கிய அஸ்வினும், ஜடேஜாவும் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடினர். அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வங்கதேச அணியை அலையவிட்டனர். 

5 /9

சிறப்பாக ஆடிய அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 6வது சதம் அடித்து அசத்தினார். சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் மட்டும் இது அவருக்கு இரண்டாவது சதமாகும். 

6 /9

தமிழ்நாட்டு பிளேயரான அஸ்வின் சதமடித்ததும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். மறுமுனையில் ஜடேஜாவும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

7 /9

ஒரு கட்டத்தில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட் இருந்த நிலையில், இருவருக்கும் மேற்கொண்டு ஒரு விக்கெட்கூட விழாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. 

8 /9

அஸ்வின் - ஜடேஜா கூட்டணி 7வது விக்கெட்டுக்கு மட்டும் 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 7வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிக ரன்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.   

9 /9

நாளை இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது நாள் போட்டி நடைபெற இருக்கிறது. அஸ்வின் - ஜடேஜா இருவரும் இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்க இருக்கின்றனர்.