எச்சரிக்கை... இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்... சில ஆபத்தான பானங்கள்

இதய தமனிகள் இரத்த நாளங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் உதவியால் தான் ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தம் இதயத்திலிருந்து உடலின் அனைத்து பாகங்களையும் சென்றடைகிறது. இதில் ஏற்படும் அடைப்புக்கு அதிரோஸ்கிளிரோசிஸ் என்று பெயர். இது மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது

இதய தமனிகளில் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும் போது, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு பக்க வாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. இதய தமனிகளில்மடைப்பு ஏற்பட உணவுப் பழக்கவழக்கங்களே பெரிதும் காரணமாகின்றன. இதன் காரணமாக, கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற கூறுகள் தமனிகளில் சேரத் தொடங்குகின்றன.

1 /9

இதய தமனிகளில் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும் போது, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு பக்க வாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட உணவுப் பழக்கவழக்கங்களே பெரிதும் காரணமாகின்றன. இதன் காரணமாக, கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற கூறுகள் தமனிகளில் சேரத் தொடங்குகின்றன.

2 /9

இதய தமனிகள் ஏற்படும் அடைப்பு காரணமாக, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டமும், இதயத்திலிருந்து, உடலின் புற பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படுவதால், இதய நோய், இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, இதயத்தில் அடைப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.  

3 /9

சோடா பானங்கள்: அளவிற்கு அதிகமான சர்க்கரை சேர்த்த சோடா பானங்கள் இதய தமனிகளுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த பானங்களில் அதிக அளவு பிரக்டோஸ் கார்ன் சிரப் (HFCS) உள்ளது.. இதனை அருந்துவதை வழக்கமாக்கிலக் கொண்டால், உடலில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக அடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

4 /9

காஃபின் பானம்: அதிக காஃபின், கிரீம் மற்றும் சர்க்கரை நிறைந்த ஆற்றல் பானங்கள் பிபி மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கும். இந்த பானங்களை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதுமன் காரணமாக, குறிப்பாக இளைஞர்களிடையே, இதய பிரச்சினைகள் ஏற்படலாம். இதை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது இரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது இதய அடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.   

5 /9

செயற்கை பழச்சாறு: இயற்கையாக பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகள் ஆரோக்கியமானவை என்று கருதப்படுகின்றன. ஆனால் பதப்படுத்தப்பட்டு, பேக் செய்யப்பட்ட செயற்கை பழச்சாறுகளில் சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படுவதால் உடலில் கொழுப்பு சேரும். மேலும், இதனை அளவிற்கு அதிகமாக குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்.  

6 /9

மில்க் ஷேக்ஸ் மற்றும் ஸ்மூத்திஸ்: பேக்கேஜ் செய்யப்பட்ட மில்க் ஷேக்குகள் மற்றும் ஸ்மூத்திகளில் சர்க்கரை, செயற்கை நிறங்கள் மற்றும் பிரிசர்வேடிவ்கள், கிரீம்கள் உள்ளன. எனவே, இந்த பானங்களை தொடர்ந்து உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், இது தமனிகளில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குவிவதற்கு வழிவகுக்கும்.  

7 /9

மதுபானம்: தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கு மது ஒரு முக்கிய காரணம். அளவிற்கு அதிகமாக இதைக் குடிப்பது உடலில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இது தமனிகளில் அடைப்பு ஏற்பட வழிவகுக்கும். அதோடு, உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் கல்லீரலையும் சேதப்படுத்துகிறது.

8 /9

இன்றைய தவறான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும், கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது, சர்வசாதாரணமான பிரச்சனை என ஆகி விட்டது. இதய நாளங்களில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் சேர்வதால், மாரடைப்பு, அதிக பிபி போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், நாம் உண்ணும் உணவுகள் அருந்தும் பானங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)