கருவளையம் நிரந்திரமாக காணாமல் போக... ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை  கண்களையும் சருமத்தையும் பெரிதும் பாதிக்கிறது. எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். 

கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது இன்றைய வாழ்க்கை முறை  கண்களையும் சருமத்தையும் பெரிதும் பாதிக்கிறது. எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். 

1 /7

கருவளையம் பிரச்சனை இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், வேலையில் இருக்கும் பெரும்பாலானோர், கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதாலும், போதுமான தூக்கம் இல்லாததாலும் கருவளையம் பிரச்சனை என்பது பொதுவாக அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனையாகி விட்டது. அது முக அழகை குலைக்கிறது என்பதோடு, வயதான தோற்றத்தை கொடுக்கிறது.

2 /7

வெள்ளரி சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. இதைப் பயன்படுத்த, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டவும். அதன் பிறகு, 10 நிமிடங்களுக்கு உங்கள் கண்களில் வைத்திருங்கள், இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். 

3 /7

கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க, 2 டீஸ்பூன் தக்காளிச் சாற்றில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களுக்குக் கீழே  தடவி, 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் கருவளையம் பிரச்சனை நீங்கும். 

4 /7

கருவளையத்தை போக்க இது ஒரு பயனுள்ள மாய்ஸ்சரைசர் ஆகும். கண்களைச் சுற்றியுள்ள பகுதியை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, கருவளையங்களையும் நீக்குகிறது. இது தவிர, கற்றாழை சருமத்திற்கு ஊட்டமளிக்க உதவுகிறது. 

5 /7

உருளைக்கிழங்கை அரைத்து, அதன் சாற்றை தனித்தனியாக எடுத்துக் கொண்டு, உங்கள் கண்களுக்குக் கீழே சாற்றை தடவவும். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களில் கருவளையங்கள் மறைந்து விடும். 

6 /7

புதினா இலைகளை கசக்கி சாறு எடுத்து, அதனை கண்களுக்கு கீழ் தடவவும். அதனை அப்படியே 10-15 நிமிடங்கள் வரை விட்டு விடவும். பின்னர் கண்களை கழுவுங்கள். சில நாட்களில் கருவளையங்கள் மறைந்து விடும். 

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.