அட்சய திருதியை 2024: இந்த ராசிகளுக்கு தங்கம், பணம், குபேர யோகம்

Akshaya Tritiya 2024: இந்து மதத்தில் அட்சய திரிதியை மிகவும் முக்கியம் வாய்ந்த பண்டிகையாகும். வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகை 10 மே 2024 அன்று கொண்டாடப்படுகிறது, இதனால் சில ராசிக்காரர்கள் தங்கம், பணம், குபேர யோகத்தை பெறுவார்கள்.

Akshaya Tritiya 2024 Rasipalan: ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீடு தானம் செய்வது மற்றும் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும். மேலும், அட்சய திருதியை திதியில், சுப காரியங்களை துவங்க ஏற்ற காலமாகவும் பார்க்கப்படுகிறது.

1 /6

இந்த ஆண்டு அட்சய திருதியை வரும் 10 மே 2024, வெள்ளிக்கிழமை ஆகும். மேலும், இந்த நாளில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணமான கிரகமான புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த நாள் பல ராசிக்காரர்களுக்கு முக்கியமானதாக இருக்கும், மேலும் சில ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியையிலிருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எனவே அட்சய திருதியை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

2 /6

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் எகிறும். வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், பல வகையான பிரச்சினைகள் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் ஏற்படலாம்.  

3 /6

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் அட்சய திருதியையால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பையும் பெறுவீர்கள். பணியிடத்திலும் வெற்றிக்கான வாய்ப்புகள் அமையும். பாராட்டுக்களைப் பெறலாம், இதனுடன் பதவி உயர்வையும் பெறுவீர்கள். திருமண வாழ்விலும் இனிமை இருக்கும்.  

4 /6

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய வருமானம் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். வேலை மற்றும் வணிகப் பகுதிகளிலும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள், இது வெற்றிக்கான புதிய பாதைகளைத் திறக்கும். இதனுடன், நீங்கள் உங்கள் மனைவி அல்லது குடும்பத்துடன் மத பயணத்தையும் மேற்கொள்ளலாம், மன அழுத்தமும் நீங்கும்.  

5 /6

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் அட்சய திருதியையால் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். புதிய வருமான ஆதாரங்களைக் காணலாம் மற்றும் பணியிடத்தில் நல்ல செயல்திறன் பதவி உயர்வுக்கான வழியைத் திறக்கும். நிதி நிலை மேம்படும் மற்றும் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கம் ஏற்படும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு உண்டாகும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.