சனியின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. நீதியின் கடவுளாகக் கருதப்படுபவர் சனி பகவான். பொதுவாக சனி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர். 2022 ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி இல்லை என்றாலும், அவரின் நீண்ட அதிசார மற்றும் வக்ர பெயர்ச்சியின் காரணமாக தற்போது மோசமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் நற்பலனும், நற்பலன் அனுபவிக்கும் சில ராசிகளுக்கு கெடுபலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 29-ம் தேதி சனி தனது சொந்த ராசியில் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார். சனியின் ராசியின் இந்த மாற்றம் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. தற்போது 75 நாட்கள் கும்ப ராசியில் இருப்பார்.
சனியின் வக்ர பெயர்ச்சி ஜூலை 12 க்குப் பிறகு, சனி வக்ர பெயர்ச்சியாக மீண்டும் தனது சொந்த ராசியான மகரத்தில் நுழையும். இதனுடன், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும், சிலருக்கு சுப பலன்களையும் ஏற்படுத்தும். தற்போது சனிபகவான் 3 ராசிக்காரர்களுக்கு 75 நாட்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரப் போகிறார்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் நல்லது. சனி அவர்களிடம் மிகவும் அன்பாக இருப்பார். சனியின் அருளால் நல்ல பணம் கிடைக்கும். உத்தியோகத்திலோ, வியாபாரத்திலோ நல்ல வெற்றி கிடைக்கும். பணம் வருவதற்கு புதிய வழிகள் அமையும். பதவி உயர்வு இருக்கலாம். முதலீடு செய்யலாம். பழைய நோய் குணமாகும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் நல்லது. கும்ப ராசியில் 75 நாட்கள் தங்கி இருப்பதன் மூலம் சனி இவர்களுக்கு தொழிலில் பலமான பலன்களைத் தருவார். புதிய வேலை கிடைக்கலாம். பணியிடத்தில் மரியாதை பெறலாம். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து வேலைகளும் நிறைவேறும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள்.
தனுசு: கும்ப ராசியில் சனி பிரவேசித்த உடனேயே தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் இருந்து விடுதலை கிடைத்தது. தடைப்பட்ட அவர்களின் பணிகள் இப்போது நிறைவேறும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு, மரியாதை கிடைக்கும். சனி கிரகம் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும். மொத்தத்தில் 75 நாட்களுக்கு சனி மட்டுமே பலன் தரும்.