சனி - சுக்கிரன் இணைவு... லாபத்தை அள்ளப்போகும் இந்த 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் - ஜாக்பாட் உறுதி

Shani Shukran Yuti 2025: கும்ப ராசியில் சனி மற்றும் சுக்கிரன் பகவான் இணைய உள்ளதால் தானத்ய யோகம் உண்டாகிறது. இதனால், இந்த 3 ராசிக்காரர்களின் பொருளாதாரம் பலப்படும்.

ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கம் இருக்கும்.

1 /8

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் கிரகங்களின் பெயர்ச்சி அடைகின்றன. சில நேரங்களில் இரண்டு கிரகங்கள் ஒரே ராசியில் இணையும்.   

2 /8

ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கம் இருக்கும். இதனால், சில யோகங்களும் உருவாகும்.   

3 /8

அந்த வகையில், தற்போது கும்ப ராசியில் (Aquarius) சனி மற்றும் சுக்கிரன் கிரகங்கள் இணைய உள்ளதால் (Saturn Venus Conjunction) தானத்ய யோகம் (Dhanadhya Yog) உருவாகும்.   

4 /8

தானத்ய யோகத்தால் இந்த மூன்று ராசிக்காரர்களின் (3 Zodiac Signs) வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்படும். அதாவது, இந்த 3 ராசிக்காரர்கள் அனைத்து வகையான பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் பெற்று, பொருளாதார ரீதியில் அதிக லாபத்தை பெறுவார்கள். அந்த 3 அதிர்ஷ்டக்கார ராசிகள் குறித்து இங்கு காணலாம்.   

5 /8

மேஷம் (Aries): சனியும் சுக்கிரனும் கும்பத்தில் இணைவதால் அதிக லாபத்தை பெறும் ராசிகளில் இதுவும் ஒன்றாகும். தானத்ய யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும், இதனால் பணம் சார்ந்த நன்மைகள் கிடைக்கும். குடும்ப சொத்து அல்லது பழைய முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். 

6 /8

துலாம் (Libra): காதலிப்பவர்களுக்கு திருமணம் கைக்கூடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு அவர்களின் கட்சியில் பெரிய பொறுப்பு கிடைக்கும். இதனால் அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுப்படுத்தலாம். கலை சார்ந்தவர்களின் புகழ் பரவும். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். 

7 /8

மகரம் (Capricon): சனி, சுக்கிரன் பகவானால் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை பலப்படும். இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். மேலும், நிலம் வாங்கும் வாய்ப்பும் உம்டாகும். பணியிடத்தில் மேலாளருக்கு உங்கள் மீது நன்மதிப்பு உண்டாகும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.