ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!

இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்புவதால் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெற உள்ளார். 

 

1 /5

மிகவும் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளார்.  அடுத்த ஆண்டு ஆஷஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில், இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.  

2 /5

ஆண்டர்சன் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். உலகிலேயே மூன்றாவது அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.  

3 /5

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது 700 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஆண்டர்சன். தற்போது ஷேன் வார்னின் 708 விக்கெட்டுகளை நெருங்கி வருகிறார்.  

4 /5

42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன், 2002ல் இங்கிலாந்து அணியில் அறிமுகமானார். அவரின் பவுலிங் பாட்னரான ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வை கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.   

5 /5

இந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை நடத்த இங்கிலாந்து தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்தில் நடைபெறும் தொடருடன் ஆண்டர்சன் ஓய்வு பெற உள்ளார்.