கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி வகையை சேர்ந்தது. பொதுவாக சில காய்கறிகள் கசப்பு தன்மை கொண்டது. ஆனால், அதுவே சமைத்த பின்னர் அது மென்மையானதாக மாறிவிடுகிறது. கத்திரிக்காயில் சில தீமைகள் ஏற்படுவது உண்டு. இந்த கட்டுரையின் மூலம் கத்திரிக்காய் மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளலாம்.
கத்திரிக்காய் அதிகமாக சாப்பிட்டால் மாதவிடாய் ஏற்படும். இதில் தீமை இல்லை என்றாலும், கர்ப்பிணிகள் ஆரம்பகட்டத்தில் இதை அதிகம் சாப்பிட்டால் கருகலையும் வாய்ப்பு ஏற்படும். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாத காலத்தில் கத்திரிக்காயை அளவோடு சாப்பிட வேண்டும்.
அதிக அளவு கத்திரிக்காய் சாப்பிடுவது வயிற்றில் அசிடிட்டியை உருவாக்கும். கத்தரிக்காய் சாப்பிட்டு ஒருவருக்கு அசிடிட்டி தொந்தரவு ஏற்பட்டால் அவர் உடனடியாக கத்திரிக்காய் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிட்டால் நாக்கில் அரிப்பு ஏற்படும். மேலும், சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிட்டால் தோலில் படை உருவாகும். இது போன்ற அலர்ஜிகள் இருந்தால் கத்திரிக்காய் சாப்பிடக் கூடாது.
கத்திரிக்காயில் அதிக பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து உள்ளது. கத்திரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் இந்த சத்துக்களும் அதிகமாக உடலுக்குள் செல்லும். இதனால் வயிறு கோளாறு, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
கத்திரிக்காயில் நிகோடின் உள்ளது. இது சிகரெட் பழக்கத்தை கைவிட உதவும். அதனால் கத்திரிக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அடிமைத்தனத்தை ஏற்படுத்திவிடும். புகையிலை இல்லாத நிகோடின் உடலுக்கு நன்மை தான். எனினும் அடிமைத்தனம் என்பது உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது.