இஞ்சி நமது சமையல் அறைகளில் எப்போதும் இருக்கக்கூடிய பொருள் ஆகும். இந்த இஞ்சியில் நீரிழிவு, சளி, வயிற்றுப் பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம், குமட்டல் போன்ற பல பிரச்சனைகளை சரி செய்ய உதவும் இஞ்ச்ரோல் என்ற பயோ ஆக்டிவ் நிறைந்துள்ளது. இஞ்சியினால் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இஞ்சியை அளவாக உண்பது ஆரோக்கியம் என்று கூறப்படுகிறது. அப்படி அளவுக்கு அதிகமாக இஞ்சி உட்கொண்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்றும் இங்கே பார்போம்.
கர்ப்ப காலம்: கர்ப்ப காலத்தில் குமட்டல் அல்லது வாந்தி பிரச்சனையை சரி செய்ய இஞ்சி கர்ப்பிணி பெண்களுக்கு உதவுகிறது. ஆனால் அதிக அளவில் இந்த இஞ்சியை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ளும் போது கருச்சிதைவு அல்லது குறைமாத பிரசவ பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே ரத்தப்போக்கு பிரச்சினைகள் உள்ள பெண்கள் இஞ்சியை தவிர்ப்பது நல்லது.
எடை இழப்பு: எடையை குறைக்க இஞ்சி வெகுவாக உதவுகிறது. எடையை குறைக்க விரும்புபவர்கள் அல்லது குறைந்த எடை உள்ளவர்கள் அவர்களின் உணவில் இருந்து இந்த இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.
பித்தப்பை கற்கள்: இஞ்சி உங்கள் பித்தப்பையில் கற்கள் ஏற்படுத்தலாம். இஞ்சியை அதிகமாக உட்கொள்வதால் இது கல்லீரலில் அதிக பித்த சுரப்பியை தூண்டி பித்தப்பை கற்கள் ஏற்பட காரணமாகிறது.
ரத்தக் கோளாறு: இஞ்சியில் சாலிசிலேட்கள் என்ற உப்பு நிறைந்துள்ளது. ரத்த கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஹீமோபிலியா போன்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களின் உணவில் இருந்து கட்டாயமாக இஞ்சியை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இஞ்சி அதிக ரத்தப்போக்கு ஏற்பட காரணமாக உள்ளது.
ஆசிட் ரிஃப்ளக்ஸ்: ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற அழற்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு, அதிகமாக இஞ்சி உட்கொள்ளல் அமில ரிஃப்ளக்ஸ், வயிற்றுப் புறணி எரிச்சல், மார்பு வலி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த ஆசிட் ரிஃப்ளக்சின் போன்ற மேற்கூறிய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க இஞ்சியை குறைவாக உட்கொள்ளுவது நல்லது.