அறுசுவைகளில் புளி எல்லோருக்கும் பிடித்தமானது. இது ஊட்டச்சத்துகளையும் பல நன்மைகளையும் உடலுக்கு தருகிறது என்றாலும் இது பல பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது. புளி பலவிதமான உணவுகளில் இவை சேர்க்கப்படுகிறது. அதிகமாக புளி எடுத்துகொள்ளும் போது உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
பல்லுக்கு சேதம் விளைவிக்கும்: புளி அமிலத்தன்மை கொண்டது. புளி அதிகமாக எடுக்கும் போது அது பற்களை பாதிக்கும் வாய்ப்பு உண்டு. புளி அதிக அளவு சாப்பிடும்போது அது பற்களின் பற்சிப்பி அமில மூலக்கூறூகளால் அரிக்கப்படுகிறது.
பித்தப்பை கற்களை உருவாக்கும்: இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் அடிக்கடி புளி சாப்பிடுவது பித்தப்பையில் கற்கள் உருவாவதை ஊக்குவிக்க செய்யும் என்று நிருபனமாகியுள்ளது. இதனால் மஞ்சள் காமாலை, வயிற்றூப்பிடிப்பு, குமட்டல், வாந்தி, செரிமான பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் உடல் நல பிரச்சனைகள் உண்டாக கூடும்.
அமிலத்தன்மையை தூண்டும்: புளி ஒரு அமில உணவாகும். அதிகமாக புளி எடுக்கும் போது இது இரைப்பை குழாய்க்குள் முக்கியமாக நமது வயிற்றுக்குள் அமில அளவை அதிகரிக்க செய்யும் இதனால் அமிலத்தன்மை அதிகரிக்க செய்யும்.
ஒவ்வாமையை உண்டாக்கும்: அலர்ஜியை உண்டாக்கும் உணவில் புளியும் ஒன்று. அதிகமான புளி சேர்த்த உணவு எடுக்கும் போது இந்த தடிப்புகள், அரிப்பு வீக்கம் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருக்கலாம்.
இரத்தப்போக்கு அபாயம்: சில மருந்துகளுடன் இரத்தபோக்கை அதிகரித்துவிட செய்யும் அபாயத்தை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. சில மருந்துகள் சேர்க்கும் போது அதிக புளி யும் உடலில் சேர்ந்தால் அது ஆபத்தை உண்டாக்க செய்யும். அதனால் தான் நாட்டு மருந்து எடுக்கும் போது பத்தியங்களில் புளியை குறைக்க உபயோகிக்க கூறிகிறார்கள்.