நடிகை பிரியாமணி முக்கியமாக தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் மூன்று பிலிம்பேர் விருதுகளையும் வென்றார்.
'பருத்திவீரன்' படத்தில் நடித்த பிறகு, அவர் மிகவும் பிரபலமானார். அவரது முத்தழகு கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது
2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
2007 ஆம் ஆண்டில், பருத்திவீரன் என்ற தமிழ் பாடத்தில் கிராமத்து பெண்ணாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார்.
2002 ஆம் ஆண்டில், தெலுங்கு திரைப்படமான எவரே அட்டகாடு (2003) இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த பிரியாமணி திரைப்படங்களில் நடிக்கும் முன் மாடலாக பணியாற்றினார்.