அட இத நம்ம கவனிக்கலையே! சிறிய கதாபாத்திரங்களில் நடித்த முன்னணி நடிகர்கள்!

ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர், நடிகைகளாக சில நட்சத்திரங்கள் ஜொலித்து கொண்டிருக்கின்றனர். [Pic Credits: Facebook]

 

1 /10

மணிரத்தினம் இயக்கத்தில், சூர்யா, சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோரது நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான படம் 'ஆயுத எழுத்து'.  இந்த படத்தில் தற்போது திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

2 /10

2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் 'தாம் தூம்'.  இந்த படத்தில் கதாநாயிகையாக நடித்திருந்த கங்கனா ரனாவத்தின் உறவுக்கார பெண்ணாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி.  

3 /10

மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'கன்னத்தில் முத்தமிட்டாள்'.  இப்படத்தில் நடிகர் சித்தார்த் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  

4 /10

பாலச்சந்தர் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான படம் 'பார்த்தாலே பரவசம்'.  இந்த படத்தில் சமுத்திரக்கனி ஒரு நோயாளியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  

5 /10

ராஜிவ் மேனன் இயக்கத்தில் அரவிந் சாமி மற்றும் பிரபு தேவா நடிப்பில் வெளியான படம் 'மின்சார கனவு'.  இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  

6 /10

2003ம் ஆண்டு வெளியான 'வின்னர்' படத்தில் சூரி சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.  

7 /10

2002ம் ஆண்டு வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தில் சந்தானம் சிறிய கதாபாத்திரத்திலும்,

8 /10

விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் நடிகர் ஷியாம் விஜயின் நண்பனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  

9 /10

'அருவி' படம் மூலம் பிரபலமாக அறியப்பட்ட அதிதி பாலன், 2015ம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தார்.  

10 /10

2011ம் ஆண்டு வெளியான 'ஆடுகளம்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த டாப்ஸியை ஒருதலையாக காதலிப்பவராக 'அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமான தினேஷ் நடித்திருந்தார்.