வானவில்லின் நிறங்களுடன் போட்டிப் போடும் நீல வானின் எண்ணிலடங்கா வண்ணங்கள்...

வானம் கூட வசப்பட்டுவிடலாம், ஆனால் வானின் ரகசியங்களும் ஆச்சரியங்களும் மட்டுமல்ல, அவற்றின் வண்ணங்களும் என்றென்றும் பிரமிப்பூட்டுபவையே...

வானத்தில் தோன்றும் வானவில்லின் நிறங்கள் ஏழு, வானம் நீல நிறம் என்பது பொதுவான கருத்து. ஆனால், வானத்தின் வண்ணங்களானது, வானவில்லின் நிறங்களுடன் போட்டி போடும் அழகுடையவை, பிரமிக்க வைப்பவை. இடத்திற்கு இடம் மாறுபடுவது சுற்றுச்சூழல் மட்டுமல்ல, வானத்தின் நிறமும் தான்.. என்றென்றும் நமக்கு வியப்பாய் விரியும் வானத்தின் ஆச்சரியமூட்டும் வண்ணக் கலவையின் எண்ணற்ற படைப்பில் சில... கண்டு ரசியுங்கள், காணக கிடைக்காத இந்த வானின் வண்ணக் கோலத்தை...

1 /13

வானின் பல்வேறு நிறங்கள், நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. மனதை மயக்குகின்றன. எத்தனை எத்தனை வண்ணங்கள் இந்த வானில் என்று மலைக்க வைக்கின்றன. இந்த மஞ்சள் வானம் மங்கலமான வானமா? அல்லது மங்களம் பாடும் வானமா? இது நம் வசப்படுமா? வானம் வசப்படுமோ என்னவோ தெரியாது, ஆனால் அதன் வண்ணங்கள் நம் மனதை வசியம் செய்யும்....

2 /13

வானில் நட்சத்திரங்கள் மின்னலாம். ஆனால் வானே நட்சத்திரமாய் மின்னினால்! அதிசயம் அற்புதம்...

3 /13

4 /13

மண்ணில் இருந்து விண்ணுக்கு சாலை அமைத்தால் அது இப்படித் தான் இருக்குமோ?

5 /13

செவ்வானம் செக்க சிவந்திருந்தால் அது சீற்றமாகத் தான் இருக்க வேண்டுமா என்ன? செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே என்று பாடலும் மனதில் தோன்றலாம். தவறொன்றும் இல்லையே!

6 /13

வானவில்லைப் பார்த்தால் வழக்கமாய் மனம் மயங்கும். ஆனால், வானத்தின் இத்துனை வண்னங்களை பாத்தால் ஏற்படும் பிரமிப்பில் இன்று வானவில் கொஞ்சம் வளைந்துவிட்டது. உண்மை தானே?

7 /13

பால்வழி அதாவது milkyway என்று பெயர் வைத்தால், அது பார்ப்பதற்கு பாலைப் போன்ற வெண்ணிறமாக இல்லையா! 

8 /13

வானம் வசப்படுமா என்று ஏங்கி கைகளை விரித்தால் வானம் வசப்படுமோ இல்லையோ மனம் லேசாகும். இந்த காட்சியைப் பார்ப்பவர்களின் மனம் பரவசமாகும்...

9 /13

திரண்டிருக்கும் மேகங்களைக் கொண்ட வானின் அழகு தனிச்சிறப்பு

10 /13

ஏணி வைத்தாலும் எட்டாத வானம் என்பதால், பாலம் கட்டத் தோன்றுகிறதோ?

11 /13

நீல வானமே என்றாலும், இது கோப வானமோ? சீற்றத்தை இடியாய் இடித்து மின்னலாய் இறக்குமோ?

12 /13

13 /13