Liver Cirrhosis Symptoms : உடலில் காணப்படும் சில பொதுவான அறிகுறிகள் கல்லீரல் இழைநார் வளர்ச்சியைக் குறிக்கலாம். இந்த அறிகுறிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்-
கல்லீரல் இழைநார் வளர்ச்சி என்பது தீரா கல்லீரல் நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் திசுவானது இழைநார்ப் பெருக்கம் , காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்ப்புள்ள காரணங்களும் உள்ளன. கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் முற்றிய நிலைகளில் கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு.
கல்லீரல் சிரோசிஸ் என்பது கல்லீரலில் புண்கள் உருவாகும் ஒரு நிலை. கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான முக்கிய காரணம் ஹெபடைடிஸ் இருக்கலாம். அதிகப்படியான குடிப்பழக்கத்தில் கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் ஆபத்து அதிகமாகும். உங்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி இருந்தால், உங்களை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். இந்த கட்டுரையில் கல்லீரல் சிரோசிஸை அடையாளம் காண சில அறிகுறிகளைப் பற்றி காணலாம்.
மஞ்சள் தோல் அல்லது மஞ்சள் கண்கள் கல்லீரல் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். இது போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் காரணமாக, சில நோயாளிகளுக்கு பசியின்மை இருக்கும். உங்களுக்கு பசி குறைவாக இருந்தால், உங்கள் கல்லீரல் செயல்பாட்டை ஒருமுறை சரிபார்க்கவும்.
கல்லீரல் இழைநார் வளர்ச்சியில் நோயாளிகள் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வார்கள். அத்தகைய அறிகுறிகளை கண்டால், உடனடியாக மருத்துவர்களின் உதவியை நாடுங்கள்.
உடலில் வீக்கம் மற்றும் அரிப்பு கல்லீரல் ஈரல் அழற்சியைக் குறிக்கலாம். இத்தகைய அறிகுறிகளை புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும். அதனால் நிலைமை தீவிரமடையலாம்.
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு உணவு சரியாக ஜீரணமாகாது. இத்தகையவர்களுக்கு சாப்பிடுவதிலும், குடிப்பதிலும் சிரமங்கள் ஏற்படலாம். மேலும், குமட்டல் மற்றும் வாந்தியும் ஏற்படலாம். அத்தகைய அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.