Foods To Prevent Hair Fall: ஆண்டு முழுவதும் ஏற்படும் வானிலையின் மாற்றங்களின் காரணத்தால் முடி உதிர்தல் பிரச்சனையை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கபடவில்லை என்றால், சிறு வயதிலேயே வழுக்கைக்கு பலியாகலாம்.
தற்போது இளம் வயதினர்கள் தலைமுடி மெலிதல் மற்றும் உச்சந்தலையில் பொடுகுத் தொல்லை போன்றவற்றால் சிரமப்படுகின்றனர். முடி உதிர்தல் உள்ளிட்ட அனைத்து முடி பிரச்சனைகளிலிருந்தும் விடுபட வேண்டுமானால், இன்றிலிருந்து இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 5 சூப்பர் உணவுகளை சாப்பிட தொடங்குங்கள்.
முட்டை: முட்டையில் அதிக அளவு புரதம் மற்றும் பயோட்டின் உள்ளது, அவை முடி ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள். இவை கரோட்டின் உற்பத்தி செய்து முடிக்கு மிகப்பெரிய வலிமையை அளிக்கிறது. மேலும் படிப்படியாக முடி உதிர்தல் பிரச்சனையும் முடிவுக்கு வர உதவும்.
வெந்தயம்: வெந்தயம் முடிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, இதில் வைட்டமின் ஈ உள்ளது, இது முடி உதிர்தலுக்கு மிகவும் சிறந்ததாகும். இரவில் தூங்கும் முன், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, இந்த தண்ணீரை வடிகட்டி, காலையில் குடிக்கவும்.
நாவல் பழம்: ஜாமூன் எனப்படும் நாவல் பழம் மிகவும் சுவையான பழமாகும், இது ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழமாகும். இந்த பழத்தை சாப்பிடுவது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது, இதன் காரணமாக முடி வேர்கள் மிகவும் வலுவாக மாறும்.
கொழுப்பு நிறைந்த மீன்: நீங்கள் அசைவ உணவை உண்பவராக இருந்தால், முடி உதிர்வு பிரச்சனையில் தீர்வு பெற கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடலாம், ஏனெனில் இதில் வைட்டமின் ஏ மற்றும் ஒமேகா-2 கொழுப்புகள் நிறைந்துள்ளன, அவை முடி உற்பத்தி மற்றும் முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும்.
கீரை: பச்சைக் காய்கறிகளில் கீரை ஒரு சிறந்த உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் பி, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையையும் நீக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.