Russia போராட்டத்தில் உள்ளாடைகளும், பனி விளையாட்டுக் கருவிகளும்

சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணிகளின் அசாதாரண மீம்ஸ்கள் மற்றும் சின்னங்கள் மற்றும் அவை எதைக் குறிக்கின்றன என்பதை தெரிந்துக் கொள்வோம். 

ரஷ்யாவின் நடைபெறும் போராட்டங்களில் வழக்கத்தைவிட மாறுபட்ட பொருட்களை காண்பித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. நீல நிற உள்ளாடை மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பிரஷ், பனிப்பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டிக்குகள் போன்றவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் வைத்துக் கொண்டு முழக்கங்களை எழுப்புகின்றனர்.

ரஷ்யாவை விமர்சிக்கும் அலெக்ஸி நவல்னிக்கு ஆதரவாக ரஷ்யாவின் எதிர்ப்பு இயக்கத்தில் இந்த வித்தியாசமான முறையை ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொள்கின்றனர்.

Also Read | இந்தியாவின் முதல் Finance Minister சண்முகம் செட்டி முதல் நிர்மலா சீதாராமன் வரை...   

 

1 /5

டிசம்பர் முதல் ரஷ்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் நீல நிற பாக்சர் ஜட்டிகளை கையில் ஏந்தியுள்ளனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா?  ஆகஸ்ட் மாதம் நோவிச்சோக் (Novichok nerve agent) கொடுத்து நவால்னி தாக்கப்பட்டார்.  பெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் (Federal Security Service (FSB)) முகவர்கள் தனது நீல நிற உள்ளாடைகளில் நோவிச்சோக் நச்சை வைத்ததாக கூறுகிறார் Navalny. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த மாதத்தில் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை கொண்டாடும் ஆர்த்தடாக்ஸ் சடங்கை (Orthodox ritual) நீல நிற நீச்சல் உடைகளை அணிந்து பனியால் குளிர்ந்த நீரில் இருந்த புகைப்படங்கள் வெளியாகின. நவல்னியின் ஆதரவாளர்கள் புடின் தனது சிறந்த எதிரியின் உள்ளாடைகளில் விளையாடுவதாக கேலி செய்தனர்.

2 /5

விஷத்திலிருந்து மீண்டு வந்த நவல்னி ஐந்து மாதங்கள் கழித்து ஜெர்மனியில் இருந்து   ரஷ்யாவுக்கு இந்த மாதம் திரும்பினார், நாட்டிற்கு வந்த உடன் அவர் உடனடியாக தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார்.  

3 /5

பனி கருவிகள்: மாஸ்கோவில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், எதிர்ப்பாளர்கள் கலகப் பிரிவு போலீசாரையும், பனிப்பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தபப்டும் ஸ்டிக்குகளைக் கொண்டு FSB-க்கு சொந்தமான கார் ஒன்றையும் சேதப்படுத்தினார்கள். 

4 /5

44 வயதான ஊழல் எதிர்ப்பு பிரச்சாரகர் வெகுஜன பேரணிகளுக்கு அழைப்பு விடுத்தார், ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையில் (Black Sea coast) ஆடம்பரமாக வைத்திருக்கு சொத்து குறித்த விசாரணை முடிவுகளை வெளியிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்களைத் தூண்டினார். அந்த சொத்து புடினுக்கு சொந்தமானது என்றும் அவர் குற்றம் சாட்டினார். 1.35 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்டது இந்த சொத்து என்று நவால்னி கூறும் இந்த வளாகத்தில், நிலத்தடி பனி வளையம் முதல் கேசினோ என அனைத்துவிதமான ஆடம்பர வசதிகள் உள்ளன.  

5 /5

சில நேரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின. எதிர்ப்பாளர்கள் எஃப்.எஸ்.பி காரின் ஜன்னலை உடைத்து முழக்கங்களை எழுப்பினார்கள்.   பேரணிகள் தொடர்பாக 21 குற்றவியல் வழக்குகள் போடப்பட்டுள்ளன.   இதில் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் அடங்கும். "சுதந்திரம், உண்மை, ரஷ்யா" மற்றும் "டவுன் வித் தி ஜார்" உள்ளிட்ட அரசியல் கோஷங்களுடன் அடையாளங்களைக் கொண்டிருந்த பனிமனிதர்களைக் கட்டியதற்காக நாடு முழுவதும் நான்கு பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.