இந்தியாவில் அதிகம் பேசப்படும் டாப் 10 மொழிகள்..! தமிழ் மொழிக்கு 5வது இடம்

Most spoken languages in India : பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் இந்தியாவில், அதிகம் பேசப்படும் மொழிகளின் அடிப்படையில் எந்த மொழி முதல் இடத்தையும், எந்த மொழி கடைசி இடத்திலும் உள்ளன என்பதை வரிசையை பார்க்கலாம். 

 

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாகும். இங்கிருக்கும் மொழி பன்மைத்துவம், பல்வேறு தரப்பட்ட கலாச்சாரம் ஆகியவை இருந்தாலும், தேசம் என்ற  ஒற்றைப் புள்ளியில் ஒரே நேர்க்கோட்டில்  இணைவது உலகநாடுகளுக்கு இன்றளவும் வியப்பை கொடுப்பவை. அத்தகைய பெருமையை கொண்ட இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளின் வரிசையை பார்க்கலாம். 

1 /10

ஹிந்தி :  இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி பட்டியலில் இந்தி முதலிடத்தில் உள்ளது. சுமார் 528 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தியை தாய்மொழியாக கொண்டிருக்கின்றனர். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் இந்தி முதன்மை மொழியாக உள்ளது.

2 /10

பெங்காலி :  பெங்காலி இந்தியாவில் அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகும். 97 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டுள்ளனர். இது முக்கியமாக மேற்கு வங்க மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படுகிறது. 

3 /10

மராத்தி : மராத்தி மகாராஷ்டிராவின் அதிகாரப்பூர்வ மொழி. 83 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள். 

4 /10

தெலுங்கு :  தெலுங்கு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் முதன்மையான மொழி. 81 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசுகின்றனர்.

5 /10

தமிழ் : இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பேசும் மொழி தமிழ். 69 மில்லியன் மக்கள் தாய்மொழியாக கொண்டிருக்கின்றனர். இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாகவும் தமிழ் உள்ளது. இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பேசப்படுகிறது. இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் செழுமையான பாரம்பரியம் கொண்ட தமிழ், உலகில் வாழும் பழமையான மொழிகளில் ஒன்றாகும்.

6 /10

குஜராத்தி : 55 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் குஜராத்தி, குஜராத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். இது இந்திய புலம்பெயர்ந்த மக்களில், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் பேசப்படுகிறது. குஜராத்தி இலக்கியம் மற்றும் உணவு வகைகள் நன்கு அறியப்பட்டவை மற்றும் போற்றப்படுகின்றன.

7 /10

உருது :  இந்தியாவில் உருது 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியாக உள்ளது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் பரவலாக பேசப்படுகிறது.

8 /10

கன்னடம் :  43 மில்லியனுக்கும் அதிகமானோர் தாய் மொழியாக கொண்டிருக்கும் கன்னடம் கர்நாடகாவின் அதிகாரப்பூர்வ மொழியாகும். 

9 /10

ஒடியா :  37 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் ஒடியா, ஒடிசாவின் அதிகாரப்பூர்வ மொழியாகும். 

10 /10

மலையாளம் : 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசும் மலையாளம், கேரளா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் முதன்மையான மொழியாக பேசப்படுகிறது.