ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மற்றும் TVS Zeppelin உட்பட 2022 ஆம் ஆண்டு வரவிருக்கும் மோட்டார் சைக்கிள்கள்

இந்தியா உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தையில் ஒன்றாகும். இந்தியாவில் வாகனம் வைத்திருப்பவர்களில் 49.7 சதவீதத்தினரிடம் மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் உள்ளது. இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் 5 மோட்டார்சைக்கிள்கள் இவை.

1 /5

ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது, அதில் முதல் மாடல் ஹண்டர் 350 இந்த ஆண்டு சந்தைக்கு கொண்டு வரப்படலாம். இந்தியச் சாலைகளில் இந்த பைக் பலமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் 349சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்டதாக இருக்கும்.

2 /5

கவாஸாகி இந்திய சந்தையில் Versys 650ஐ மேம்படுத்துகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்ட தோற்றம் மற்றும் அம்சங்களுடன் சந்தையில் வரவுள்ளது. TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், இரண்டு ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்களை இதில் கொடுக்கலாம். பைக்கின் எஞ்சின் பழைய மாடலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 /5

பி.எம்.டபிள்யூ, Apache RR310 அடிப்படையிலான புதிய 310 cc ஸ்போர்ட்ஸ் பைக்கை ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. வரவிருக்கும் மோட்டார் சைக்கிளின் டீசரை பிஎம்டபிள்யூ வெளியிட்டுள்ளது. இதில் ஸ்போர்ட்ஸ் பைக்கின் வடிவமைப்பு வெளியாகியுள்ளது. இந்த பைக்கில் 312.2சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படலாம், இது 34பிஎஸ் ஆற்றலையும் 27.3என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வரலாம்.

4 /5

பஜாஜ் ஆட்டோ சமீபத்தில் பல்சரின் 'எக்லிப்ஸ் எடிஷன்' டீசர் வெளியிட்டது. இந்த புதிய பைக் முன்பு டார்க் எடிஷனைப் பெற்ற டோமினார் போலவே இருக்கிறது. இந்த பைக் 249.07 ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சினுடன் 24.5PS ஆற்றலையும் 21.3Nm பீக் டார்க்கையும் உருவாக்கும். இது 5 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்படலாம்

5 /5

டிவிஎஸ் ஒரு க்ரூஸர் பைக்கைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது, அது செப்பெலின் ஆக இருக்கலாம். ஆனால், இது குறித்து அந்த நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.