ஓடிடி, தியேட்டரில் வெளியாகும் 8 படங்கள்.. எதை, எதில் பார்க்கலாம்?

Upcoming OTT, Theater Releases : தியேட்டர் மற்றும் ஓடிடியில் பல புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எந்தெந்த தளங்களில் எந்த படத்தை பார்க்கலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

கடந்த வாரம் பல படங்கள் ஓடிடி தளத்தில் மற்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. அதை தொடர்ந்து வரும் வாரங்களில் இன்னும் சில படங்கள் வெளியாக இருக்கிறது. அவற்றின் லிஸ்டையும் அவற்றை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்க்கலாம். 

 

1 /8

அந்தகன் பிரசாந்தின் அந்தகன் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகிறது. 

2 /8

மின்மினி  கௌரவ் கலை உள்ளிட்டோர் நடிப்பில் ஹலிதா சமீம் இயக்கியிருக்கும் மின்மினி ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகிறது.

3 /8

வீராயி மக்கள் எதிர்நீச்சல் புகழ் வேலராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் வீராயி மக்கள் 9ம் தேதி வெளியாகிறது.

4 /8

இந்தியன் 2 கடந்த மாதம் திரைக்கு வந்த இந்தியன் 2 வரும் 9ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

5 /8

டர்போ மம்முட்டி நடிப்பில் வெளிவந்த டர்போ சோனி லைவ் தளத்தில் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

6 /8

நடன்ன சம்பவம் சிம்ப்ளி சவுத் தளத்தில் மலையாள படமான நடன்ன சம்பவம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

7 /8

லைஃப் ஹில் கயி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் லைப் ஹில் கயி ஒன்பதாம் தேதி வெளியாகிறது.   

8 /8

கல்கி  அமிதாப்பச்சன், கமல், பிரபாஸ் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த கல்கி படம் அமேசான் ப்ரைம் தளத்திலும் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.