வலிமை பட வில்லன் கார்த்திகேயா திருமணம்: புகைப்பட ஆல்பம்

ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா. சமீபத்தில் இவர் தனது கல்லூரி கால தோழியை காதலித்து வருவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் தனது திருமண நாளையும் கார்த்திகேயா அறிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை ஐதராபாத்தில் கார்த்திகேயா, தனது காதலியை லோகிதா ஷெட்டியை கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். 

கார்த்திகேயாவும், லோஹிகா ஆகியோரின் திருமண ஃபோட்டோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.

இந்த திருமண விழாவில் கார்த்திகேயா மற்றும் லோஹிதாவின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5