Vanangaan : ‘வணங்கான்’ ரிலீஸ் எப்போது? சுட சுட அப்டெட்!

Vanangaan Movie Release : அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 

Vanangaan Movie Release : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படம் வணங்கான். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, 2022ஆம் ஆண்டு வெளியானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படம், எந்த மாதத்தில் ரிலீஸாக உள்ளது என்ற அறிவிப்பினை படக்குழு வெளியிட்டிருக்கிறது. கூடவே, பல்வேறு போட்டோக்களும் வெளியாகியிருக்கிறது. 

1 /8

தமிழ் திரையுலகின் தனித்துவமான கதைகளை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இயக்குநர், பாலா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம்தான், வணங்கான்.

2 /8

வணங்கான் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டே வெளியானது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. 

3 /8

வணங்கான் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகர் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நடைபெற, தன்னால் இனி இதில் நடிக்க முடியாது எனக்கூறி சூர்யா இதில் இருந்து விலகிவிட்டார். 

4 /8

சூர்யாவிற்கு ஜோடியாக, மலையாள நடிகை மமிதா பைஜு இப்படத்தில் நடித்து வந்தார். அவரும் சூர்யா விலகிய ஒரு சில நாட்களுக்கு பிறகு இப்படத்தில் இருந்து விலகினார். 

5 /8

சூர்யா விலகையதை தொடர்ந்து அருண் விஜய் இப்படத்தில் ஹீரோவாக மாறினார். ஏற்கனவே படம் பிடிக்கப்பட்ட சூர்யாவின் படக்காட்சிகள் நீக்கப்பட்டு அதில் அருண் விஜய் நடித்தார். 

6 /8

வணங்கான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு  நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

7 /8

வணங்கான் படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் படக்குழு, படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட்டையும் தெரிவித்திருக்கிறது. 

8 /8

வணங்கான் திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுதான், தற்போது வெளியாகியிருக்கும் புதிய புகைப்படம்.