Vijayakanth: விஜயகாந்திற்கு கண்ணீர் மல்க நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!

Vijayakanath Death Celebrities Who Paid Their Respects In Person: நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் மறைவை ஒட்டி, தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

1 /10

கேப்டன் விஜயகாந்த், நேற்று (டிசம்பர் 28) உடல் நலக்குறைவு காரணமாக தனது 71வது வயதில் காலமானார். இவரது மறைவினால் தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும், ஒட்டுமொத்த தமிழக மக்களுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவரது உடல், நேற்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விஜயகாந்தின் உடல் இன்று காலை, மக்கள் மரியாதை செலுத்தும் வகையில் தீவுத்திடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பல தமிழ் திரைப்பட கலைஞர்கள், விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 

2 /10

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜயகாந்திற்கு மரியாதை செலுத்திய காட்சி.

3 /10

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு முத்தம் கொடுத்தார். 

4 /10

நடிகர் கமல்ஹாசன், தீவுத்திடலுக்கு வந்து விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்தின் கோபத்திற்கு நான் ரசிகன் என்றும் கூறினார். 

5 /10

நடிகர் விஜய், நேற்று இரவு தேமுதிக அலுவலகத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கண்கலங்கி சிறிது நேரம் விஜயகாந்தின் உடலை பார்த்தவாறு நின்றிருந்தார். 

6 /10

நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். வந்தவுடன் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் மரியாதை செலுத்தினார். 

7 /10

நடிகர் சத்யராஜ், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். இவர், விஜயகாந்தின் உடலுக்கு நேற்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய காட்சி. 

8 /10

குணச்சித்திர நடிகர் எம்.எஸ் பாஸ்கர் விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்திய காட்சி. 

9 /10

இயக்குநர் வெற்றிமாறன் விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்திய காட்சி. 

10 /10

நடிகர் விஜய் சேதுபதி, விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த போது எடுத்த படம்.