பெண்களுக்கு முடி கொட்ட காரணமே இதுதான்! இந்த தப்ப செய்யாதீங்க

women Hair loss Reason : பெண்கள் அதிகமாக முடி கொட்டினால் மிகவும் கவலைப்படுவார்கள். ஆனால், அது எதனால் நடக்கிறது? என்பதை தெரிந்து கொண்டால், அதனை ஈஸியாக சரிசெய்துவிடலாம்.

women Hair loss Reason Prevention : பெண்களுக்கு பொதுவாக முடி கொட்டுவதற்கு வைட்டமின் டி குறைப்பாடு காரணமாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் இன்னும் சில அறிகுறிகள் தென்படும். அப்போதே புரிந்து கொண்டால் வைட்டமின் டி குறைப்பாட்டை சரிசெய்து, முடி கொடுத்தலையும் தவிர்க்கலாம். முடிக்கும், வைட்டமின் D-க்கும் என்ன தொடர்பு என்பதை பார்க்கலாம். 

1 /8

முடி கொட்டுவதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அதில் பெண்கள் கவனிக்காத காரணமும் ஒன்று வைட்டமின் டி குறைபாடு. இதனால் தலையில் புதிய மயிர்க்கால்களின் உற்பத்திக்கு வைட்டமின் டி தேவை. 

2 /8

ஸ்டெம் செல்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வைட்டமின் டி புதிய மயிர்க்கால்களை உருவாக்க உதவுகிறது என்றும், அது முடி மீண்டும் வளர உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

3 /8

நம் உடலில் போதுமான வைட்டமின் டி இல்லாதபோது, அது சாதாரண மயிர்க்கால் சுழற்சியை சீர்குலைத்து, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். சரி, வைட்டமின் டி குறைபாடு காட்டும் அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

4 /8

வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு, நீடித்த எனர்ஜி இருக்காது. எலும்பு வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டால் வைட்டமின் டி குறைபாடாக இருக்கலாம். சில ஆய்வுகள் குறைந்த வைட்டமின் டி இருப்பவர்களுக்கு மனச்சோர்வு உள்ளிட்ட மனநிலைக் கோளாறுகளும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

5 /8

வைட்டமின் டி குறைப்பாட்டை கண்டறிய ரத்த பரிசோதனை ஒன்றையும் செய்தால் உறுதிபடுத்திக் கொள்ளலாம். ஒருவேளை வைட்டமின் டி குறைப்பாட்டை நீங்கள் உறுதி செய்துவிட்டால், அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

6 /8

சூரிய ஒளியில் போதுமான நேரத்தைச் செலவிடுவது உங்கள் உடல் வைட்டமின் D ஐ உற்பத்தி செய்ய உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது சுமார் 15-30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

7 /8

கொழுப்பு நிறைந்த மீன்கள், முட்டையின் மஞ்சள் கருக்கள், பால் பொருட்கள் மற்றும் சூரிய ஒளியில் வெளிப்படும் காளான்கள் போன்ற வைட்டமின் D நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும். 

8 /8

சூரிய ஒளி மற்றும் உணவில் இருந்து போதுமான வைட்டமின் டி பெறுவது சவாலானது என்றால், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான பெரியவர்களுக்கு தினசரி 600-800 IU (சர்வதேச அலகுகள்) உட்கொள்ளுமாறு தேசிய சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.