இத்துனூண்டு சுண்டைக்காய்.. வியக்க வைக்கும் 5 அற்புத பொக்கிஷ நன்மைகள்

சுண்டைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காய் ஆகும். எனவே இந்த இத்துனூண்டு சுண்டைக்காாயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

 

சுண்டைக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து போன்றவை அதிகளவு உள்ளது. மேலும் இந்த சுண்டைக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். எனவே இத்துனூண்டு சுண்டைக்காாயை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

1 /6

எலும்புகளை வலுவாக்கும்: சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மை உள்ளவர்கள் கட்டாயம் வாரம் ஒருமுறை சுண்டைக்காய் சாப்பிடலாம்.  

2 /6

​இதய ஆரோக்கியம்: சுண்டைக்காயில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அமினோ அமிலங்களும் இதில் அதிகம். இதயத் தசைகளைத் தளர்வாக்கி இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவி செய்கிறது.

3 /6

நீரிழிவு: கிளைக்கோஸைடு என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் சுண்டைக்காயில் உள்ளதால், இவை இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது. அதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயராமல் பார்த்துக் கொள்ளும்.  

4 /6

வயிற்றுக்கோளாறு: செரிமானமின்மை, வயிற்று மந்தம், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சுண்டைக்காய் நல்ல மருத்தாக செயல்படும்.

5 /6

பசியின்மையை: பசி உணர்வே இல்லாமல் இருப்பவர்கள் சுண்டைக்காயி உட்கொள்ளலாம், இவை உங்கள் பசியை தூண்டுவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. எனவே சுண்டைக்காயை வாரம் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிடவும்.  

6 /6

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.