Worlds longest passenger train through Swiss Alps: உலகின் மிக அழகான ரயில் பாதையில் உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயிலில் பயணிப்பதன் மூலம் உலகின் மிக அழகான ரயில் பாதையையும் கண்டு மகிழலாம்.
உலகின் மிக அழகான ரயில் பாதையில் உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் பயணிப்பதன் மூலம் உலகின் மிக அழகான ரயில் பாதையையும் கண்டு மகிழலாம்.
உலகின் மிக நீளமான ரயில் என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. இந்த ரயிலில் 4550 இருக்கைகள் உள்ளன, ஒரே நேரத்தில் 7 ஓட்டுநர்களால் மிகுந்த ஒருங்கிணைப்புடன் இயக்கப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம், சுவிட்சர்லாந்து தற்போது உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கும் நாடாக மாறியுள்ளது.
சுவிஸ் ரயில்வேயுடன் இணைந்த ரேடியன் ரயில்வே நிறுவனம், 100 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலை சுமார் 2 கிலோமீட்டர் நீளம் இயக்கியது. Ratian Railway மூலம் இந்த உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது
The Rhaetian Railway RhB நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், 22 சுரங்கங்கள் மற்றும் 48 பாலங்கள் வழியாக சென்றது. இந்த ரயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய ஆல்புலா / பெர்னினா பாதையில் செல்கிறது
4550 இருக்கைகள் மற்றும் 7 ஓட்டுநர்களுடன், சுவிட்சர்லாந்து இப்போது உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கும் நாடாக மாறியுள்ளது என்று சுவிஸ் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ரயில் பாதையில் இயங்கும் அனைத்து சேவைகளின் செயல்பாடும் கொரோனா தொற்றுநோய் காலத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ரயில்வேயின் வருவாயிலும் மோசமான விளைவை ஏற்படுத்தியது. இந்த ரயிலின் மூலம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இந்தப் பாதையில் ரயில் பயணத்தை ரசிக்கத் திரும்புவார்கள் என்று ரயில்வே நிறுவன அதிகாரிகள் நம்புகின்றனர்
ஒரு மதிப்பீட்டின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவில் ரயில்வே துறையின் வணிகத்தில் 30 முதல் 35 சதவீதம் அடிபப்ட்டது. இப்போது மீண்டும் நாட்டின் சுற்றுலாத் துறை வேகம் பெற்று வருகிறது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் பயணிக்கும் ரயிலில், ஆல்ப்ஸ் மலைகள் வழியாக சுமார் 25 கிலோமீட்டர்கள் பயணிக்கலாம்
சுவிஸ் ரயிலின் 175வது ஆண்டு விழாவில் இந்த ரயில் இயக்கப்பட்டது. அழகிய யுனெஸ்கோ உலக பாரம்பரியத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்த ரயிலை இயக்கியதாக ரயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரி ரைத்தியன் கூறுகிறார்.