பட்ஜெட் விலையில் Xiaomi Mi 10T ஸ்மார்ட்போன்.. இதன் சிறப்பம்சம் என்ன?

  • Jan 23, 2021, 15:04 PM IST
1 /4

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை இப்போது நேரலையில் உள்ளது மற்றும் பட்ஜெட் விலையிலான மற்றும் முதன்மை தொலைபேசிகளில் பல கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை இந்த விற்பனை வழங்கி வருகிறது. நீங்கள் ஒரு பிரீமியம் சாதனத்தைத் தேடுகிறீர்கள், ஆனால் ஒரு பெரிய தொகையை செலவிட விரும்பவில்லை என்றால், நீங்கள் இப்போது ரூ.3,000 தள்ளுபடியுடன் ஒரு ஸ்மார்ட்போனைப் பெற முடியும். 

2 /4

ஆமாங்க, அது கண்டிப்பா Mi 10T 5ஜி ஸ்மார்ட்போன் தான். இந்த Mi 10T 5ஜி கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 144Hz டிஸ்ப்ளே, 64MP டிரிபிள்-லென்ஸ் அமைப்பு போன்ற அம்சங்கள் இந்த விலை வரம்பில் சாதனத்தை சிறப்பான ஒரு சாதனமாக மாற்றுகின்றன.

3 /4

Mi 10T ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.35,999 விலையில் அறிமுகமானது. இப்போது ரூ.3000 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.32,999 விலையில் கிடைக்கிறது. மறுபுறம், ஹை-எண்ட் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை இப்போது ரூ.34,999 விலையில் வாங்கலாம், இது முன்பு ரூ.37,999 விலையிலானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

4 /4

தொலைபேசி காஸ்மிக் பிளாக் மற்றும் லூனார் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. தவிர, நீங்கள் மேலும் ஐசிஐசிஐ வங்கி கடன் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.3,000 உடனடி தள்ளுபடிகளையும் பெறலாம். தள்ளுபடி விலை ஜனவரி 24 வரை மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.

You May Like

Sponsored by Taboola