2023 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. வருடாந்தர ராசிபலனில், காதல் ஜாதகப்படி, 2023-ம் ஆண்டு 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இவர்களின் காதல் கனவு நிறைவேறும். கல்யாணம் ஆகாதாவர்களுக்கு திருமணம் செய்வதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் காதல் காற்று வீசும். தங்கள் காதல் துணை மற்றும் வாழ்க்கை துணையுடன் மனதிற்கு இதமான வகையில் நேரத்தை செலவிடுவார்கள்.
மேஷம்: 2023-ம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களின் காதல் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமண வாய்ப்புகள் வரலாம். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் இடையேயான நேரம் குறிப்பாக நல்ல நேரம். காதல் உறவில் இருப்பவர்களுக்கும் நேரம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்: காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு, ஜூலை மாதம் வரை திருமணம் நடைபெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
சிம்மம்: காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும். துணைவர் திருமணத்திற்கு சம்மதம் அளிப்பார். உறவில் கசப்பு இருந்திருந்தால், அது தீர்ந்து, இனிமையான தருணங்களை அனுபவிப்பீர்கள். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கல்யாணம் ஆகாதவர்களுக்கு துணை கிடைக்கும். திருமண வாய்ப்பும் உண்டாகும்.
விருச்சிகம்: 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். காதல் உறவில் இருப்பவர்கள், தங்கள் வீட்டில் நாதஸ்வரம் ஒலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மறுபுறம், வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்கும் சிறந்த துணை கிடைக்கும். இந்த ஆண்டு திருமண வாழ்க்கைக்கும் ஏற்றது.
கும்பம்: காதல் உறவு வலுவாக இருக்கும். துணையுடன் அன்பான நேரத்தை செலவிடுவீர்கள். ஒற்றை மக்கள் தங்கள் இதயங்களைப் பெறுவார்கள். மறுபுறம், மே மாதத்திற்குப் பிறகு திருமணமானவர்களுக்கு நல்லது. வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)