Weight Loss Tips: ஒரு வாரத்தில் 7 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்பது சாத்தியமா என கேட்டால், உடல் எடையை விரைவாகக் குறைப்பது சாத்தியம் என்றாலும், அதை ஆரோக்கியமாகச் செய்வது முக்கியம். இல்லை என்றால், உடல் பலவீனமாகி சோர்வு அதிகம் உண்டாகும் ஆபத்து உண்டு.
ஆரோக்கியமான முறையில் ஒரே வாரத்தில் 7 கிலோ எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்வதன் மூலம் 7 நாட்களில் எடையை குறைத்து அசத்தலாம் . விரைவாக எடையை இழக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள மேலே படியுங்கள்.
Weight Loss Tips: ஒரு வாரத்தில் 7 கிலோ எடையை குறைப்பது சாத்தியம் என்றாலும், அதை ஆரோக்கியமாகச் செய்வது முக்கியம். இல்லை என்றால், உடல் பலவீனமாகி சோர்வு அதிகம் உண்டாகும் ஆபத்து உண்டு.
ஆரோக்கியமான முறையில் ஒரே வாரத்தில் 7 கிலோ எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம். தீவிரமான உணவு கட்டுப்பாடு தீங்கு விளைவிக்கும் மற்றும் அவை எடை இழப்பிற்கு பதிலாக, எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைக்க சரிவிகித உணவை உணவு பழக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் எடை இழப்பு உணவில் பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும். சரியாக சாப்பிடுவது என்பது பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை முற்றிலும் தவிர்ப்பது அதை விட முக்கியம்.
நிறைய தண்ணீர் அருந்துவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். மேலும், நீங்கள் அருந்துவது வெந்நீர் என்றால், அது கூடுதல் பலனைக் கொடுக்கும். வெந்நீர் வளர்சிதை மாற்றத்தை மேலும் துரிதப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உணவு விஷயத்தை போலவே வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வாரத்தின் பெரும்பாலான நாட்களில், குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபட முயற்சிக்க வேண்டும்.
தூக்கமின்மை உங்கள் உடலில் அதிக கிரெலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது உங்களுக்கு பசியை உண்டாக்குகிறது. இதன் விளைவாக, நீங்கள் அதிகமாக உட்கொள்ளலாம் மற்றும் எடை அதிகரிக்கலாம். தினமும் இரவு 7-8 மணி நேரம் ஆழ்ந்த நல்ல தூக்கம் அவசியம்.
மன அழுத்தம் காரணமாக அதிகம் சாப்பிடுவதற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகிறது. எனவே, ஒரு வாரத்தில் எடை இழக்க விரும்பினால், மன அழுத்தத்தைத் தவிர்க்க நினைவில் கொள்ள வேண்டிய இறுதி விஷயம். யோகா, தியானம் அல்லது உடல் செயல்பாடு போன்ற ஆரோக்கியமான மன அழுத்தத்தைக் குறைக்கும் உத்திகளைக் கண்டறியவும்.
குறிப்பு: மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை நீங்கள் கருத்தில் கொண்டால், ஆரோக்கியமான முறையில் ஒரு வாரத்தில் 7 கிலோ கிராம் குறைக்க முடியும். ஆனால் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை நினைவில் கொள்வது முக்கியம், எனவே ஒருவருக்கு ஏற்றது மற்றொருவருக்கு பொருந்தாது. உங்கள் எடை இழப்பு பற்றி ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.