சிக்னல் செயலில் கணக்கை உருவாக்குவது மற்றும் நீக்குவது எப்படி? இந்த வழிகளை பின்பற்றவும்

How to Create Signal Account in your Mobile: வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை சர்ச்சைகளுக்கு (WhatsApp Privacy Policy Controversy) மத்தியில் சிக்னல் செயலி (Signal App) இந்தியாவில் பரவலான பிரபலத்தைப் பெற்று வருகிறது. சமீபத்தில் நாட்டில் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. 

சிக்னல் மெசேஜிங் பயன்பாட்டைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உண்மையில், நீங்கள் நீண்ட காலமாக வாட்ஸ்அப்பைப் (WhatsApp) பயன்படுத்துகிறீர்கள் என்றால் சிக்னலை அணுகுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

 

1 /5

சிக்னல் ஆப்பில் கணக்கை உருவாக்குவது எப்படி? இந்த வழிகளை பின்பற்றவும் படி 1: கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து சிக்னல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

2 /5

படி 2: பயன்பாட்டைத் திறக்கவும் படி 3: தொலைபேசி எண், உங்கள் பெயர் போன்ற உங்கள் விவரங்களை உள்ளிடவும் படி 4: சிக்னல் ஆப் பயன்பாட்டிற்கான உங்கள் கணக்கு உருவாக்கப்படும்.

3 /5

சிக்னல் கணக்கை நீக்குவது எப்படி படி 1: பயன்பாட்டைத் திறக்கவும்.

4 /5

படி 2: சுயவிவரத்திற்குச் (Profile) சென்று மேம்பட்ட விருப்பத்தை (Advanced Option) திறக்கவும். படி 3: பின்னர் கணக்கை நீக்கு (Delete Account) என்பதைக் கிளிக் செய்து பின்னர் தொடரவும் விருப்பத்தை (Proceed Option) கிளிக் செய்யவும். 

5 /5

உங்கள் சிக்னல் பயன்பாட்டை நீக்கியதும், உங்கள் எல்லா தரவும் செயலில் இருந்து நீக்கப்படும் என்பது சிக்னல் ஆப்பின் நல்ல செய்தி.