ருசியா சாப்பிட்டுகிட்டே அழகாகலாம்! நோய்களுக்கு குட்பை சொல்லும் வெந்தயக்கீரை!

Fenugreek Green Leaves For Health: புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சுண்ணாம்புச்சத்து என பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள வெந்தயக்கீரை நோய்களுக்கு எதிரியாக செயல்பட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

Food For Health:  தொடர்ந்து வாரத்தில் 3 நாட்கள் வெந்தயக்கீரையை உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு உங்களுக்கு வாய்க்கும். அது மட்டுமல்ல, ஆரோக்கியத்துடன் அழகையும் சேர்த்து அள்ளி வழங்குகிறது வெந்தயமும் அதன் கீரையும் என்பது இந்தக் கீரையின் மகத்துவம் ஆகும்.

1 /7

நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் அடிப்படையாகிறது. அந்த வகையில் நமது வளமான வாழ்க்கைக்கு அவசியமான கீரைகளில் ஒன்றான வெந்தயக் கீரையை எப்படியெல்லாம் சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

2 /7

வெந்தயக்கீரையில் சிறிதளவு கசப்பு இருக்கும். இந்தக் கீரையை பல்வேறு விதமாக சமைத்து உண்ணலாம். ஆனால் எப்படி உண்டாலும், அது அற்புதமான பலனைத் தரும்

3 /7

ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமப் பராமரிப்பு, கூந்தல் வளர்ச்சி, தோல் பளபளப்பு என அழகையும் கூட்டும் பண்பைக் கொண்டது வெந்தயம். இதன் கீரை மட்டுமல்ல, முளைக் கட்டிய வெந்தயத்தில் தரமான நார்ச்சத்து இருப்பதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

4 /7

வெந்தயத்தை சமைத்தும், கீரையாகவும் உண்பதைப் போலவே, அதை ஊற வைத்த தண்ணீரை பருகி வந்தால், உடல் சூடு தொடர்பான பிரச்சனைகள், இரத்த சர்க்கரை அளவு என பல பிரச்சனைகள் தீரும்

5 /7

சாப்பாத்தி மாவுடன் வெந்தயக்கீரையை சேர்த்து பரோட்டாவாக செய்து உண்டால் அதன் ருசியும் அபாரமாக இருக்கும், ஆரோக்கியமும் மேம்படும்

6 /7

வெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டால், புரதச்சத்தும் உடலுக்கு சேர்ந்து ஆரோக்கியம் மேம்படும்

7 /7

வெந்தயத்தை முளைக்கட்டி உண்பது பல்வேறு நோய்களுக்கு அற்புதமான மருந்தாகும், குடல் இயக்கத்தை இயல்பாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க முளைகட்டிய வெந்தயம் அற்புதமான மருந்தாக செயல்படும்