வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கேரன் பொல்லார்ட் தற்போது அபுதாபி டி 10 லீக் 2021 இல் விளையாடிக் கொண்டிருக்கிறார். அங்கு அவர் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை வழிநடத்துகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரன் பொல்லார்ட் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிர் இழந்ததாக சமீபத்தில் ஒரு போலி வீடியோ சமூக தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த போலி வீடியோவைப் பார்த்த பலர் இதை உண்மை என நம்பினர். ‘கேரன் பொல்லார்ட் மரணம்’ என்ற செய்தி இணையத்தில் வெகுவாக பரவத் தொடங்கியது. சில நேரத்திற்கெல்லாம் அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் (Viral) ஆனது.


ஆனால் கேரன் பொல்லார்டிற்கு (Kieron Pollard) ஒன்றும் ஆகவில்லை. அவர் நலமோடு அபுதாபியில் டி 10 லீக்கில் ஆடிக்கொண்டிருகிறார் என்பதுதான் உண்மையாகும்.


கேரன் பொல்லார்ட் குறித்து பரப்பப்பட்ட இந்த செய்தி பற்றி ஆன்லைனில் செய்யப்பட்ட உண்மை சரிப்பார்ப்புக்குப் பிறகு, பொல்லார்ட்டின் மரணம் பற்றி YouTube- பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் முற்றிலும் போலியானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் கண்டறியப்பட்டது.


ஆல்ரவுண்டர் பொல்லார்ட் முற்றிலும் உடல்நலத்துடனும், நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை விரைவில் ரசிகர்கள் உணர்ந்தனர்.


சில ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இது பற்றிய உண்மையை தெளிவுபடுத்தினர். ட்விட்டரில் பதிவிட்ட ரசிகர்கள், பொல்லார்ட் பற்றி வந்த செய்தி போலியானது என்றும், இப்படிப்பட்ட செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். 'கீரோன் பொல்லார்ட் கார் விபத்து' செய்திக்கு ரசிகர்கள் ட்விட்டரில் எவ்வாறு ரியாக்ட் செய்தனர் என பார்க்கலாம். சில ரசிகர்களின் பதிவுகள் உங்கள் பார்வைக்கு.





ALSO READ: Pakistan கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை ட்ரோல் செய்யும் ICC


இதற்கிடையில், அபுதாபி டி 10 லீக் 2021 இல் பொல்லார்ட்டின் அணி மோசமான தொடக்கத்தையே பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் புனே டெவில்ஸிடம் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பொல்லார்டின் அணி தோல்வியடைந்தது. டாஸ் வென்ற டெக்கான் கிளாடியேட்டர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டனர். பொல்லார்ட் தலைமையிலான அணி தனது 20 ஓவர்களில் 104/5 ரன்கள் எடுத்தது. அசாம் கான் 13 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். பொல்லார்ட் ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆறு பந்துகளில் அவர் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார்.


அதற்கு பதிலளித்த டெவில்ஸ் மூன்று பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், இலக்கை வசதியாக எட்டியது. புனேவுக்காக ஆடிய கென்னர் லூயிஸ் 28 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த தோல்வியை மறக்கடிக்கும் விதத்தில் கிளாடியேட்டர்ஸ் தங்கள் அடுத்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


COVID-19 அச்சங்கள் காரணமாக தற்போது நடந்து வரும் வங்கதேச சுற்றுப்பயணத்திலிருந்து பொல்லார்ட் உட்பட பலர் தேசிய அணிக்கு விளையாடுவதிலிருந்து பின் வாங்கினர். எனினும், அதன் பிறகு பொல்லார்ட் அபு தாபி T-10 லீக்கில் விளையாட ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR