India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தாய் மண்ணில் பல கிரிக்கெட் போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. அதிலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் இந்தியாவுக்கு எப்போதுமே சிறப்பு வாய்ந்தது தான். சேப்பாக்கத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள் என்ன தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2021, 06:37 PM IST
  • சேப்பாக்கத்தில் இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதுகின்றன
  • சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் ஏலம் நடைபெறுகிறது
  • இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேப்பாக்கம் மைதானத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது
India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள் title=

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானம் அதாவது எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் இந்தியா, இங்கிலாந்து  அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்த இந்திய சுற்றுப் பயணம்,  கொரோனா தொற்று நோய் காரணமாக உலக அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட 10 மாதங்களுக்கு பிறகு சாத்தியமாகியிருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்திய மண்ணில் நடைபெறும் மீண்டும் தொடங்கும் சமயத்தில் இன்று சென்னை சேப்பாக்கம் பெயர் மீண்டும் அடிபடுகிறது. இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது ஒரு காரணம் என்றால், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான (IPL 2021) ஏலம் இதே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மற்றொரு காரணம்.
 
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சமீபத்தில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளிகளில் வென்றது. அந்நிய மண்ணில் பெற்ற வெற்றியால், இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள உத்வேகமும் எதிர்பார்பும், சொந்த மண்ணில் வெற்றியை தேடித்தரும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, சேபாக்கம் மைதானத்தில் இந்தியாவின் சாதனைகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்… 

Also Read | இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வு விதிமுறைகளை கடுமையாக்கும் BCCI

சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றி 1952 இல் கிடைத்தது. அந்தப் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெர்றி பெற்றது. அந்த போட்டியில் வினூ மங்கட் (Vinoo Mankad) 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவின் பாலி உம்ரிகர் (Poly Umrigar) மற்றும் பங்கஜ் ராய் (Pankaj Roy) சதம் அடித்தனர்.  

இந்தியாவில் விளையாடப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், சேபாக்கம் மைதனாத்தில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடப்பட்ட மொத்தம் 32 போட்டிகளில் 14 டெஸ்ட்களை இந்தியா வென்றுள்ளது. 11 போட்டிகளில் டிரா செய்துள்ள இந்திய அணி, 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.  

Also Read | IPL 2021 ஏலம் பிப்ரவரி 18 அன்று சென்னையில்  நடைபெறுமா

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இந்தியாவின் மிகப்பெரிய இன்னிங்க்ஸ் 759/7 பதிவு செய்யப்பட்டது. இது 2016 டிசம்பரில் நடைபெற்ற போட்டியில் பதிவு செய்யப்பட்ட ஸ்கோர். அதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி மிகக் குறைவான ஸ்கோரை பதிவு செய்ததும் இதே சேப்பாக்கம் மைதானத்தில் தான். 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற  டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்திய அணி வெறும் 83 ரன்களை மட்டுமே எடுத்தது.  

இங்கிலாந்துக்கு எதிராக சுனில் கவாஸ்கர் அதிக ரன்கள் எடுத்ததும் சென்னை சேப்பாக்கத்தில் தான். அவர் 1018 ரன்களை சிதம்பரம் மைதானத்தில் எடுத்துள்ளார். அது மட்டுமல்ல, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மிகவும் அதிக ரன்கள் எடுத்தவரும் சுனில் கவாஸ்கர் தான். அதுமட்டுமல்ல, 1000 ரன்களைக் கடந்த ஒரே பேட்ஸ்மேன் கவாஸ்தான். 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த ரன்களை அவர் எடுத்தார்.  அவரது அதிகபட்ச ரன்கள் ஆட்டமிழக்காமல் 236 எடுத்தது தான்.

Also Read | நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு மஹிந்திரா கார் பரிசு: ஆனந்த் மஹிந்திரா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News