சனியின் அருளால் உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம்: 4 ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம்
Saturn Transit Effects on Zodiacs: சனி பகவானின் மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று அடிக்கப்போவது நிச்சயம். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் நீதிக்கடவுளாக பார்க்கப்படுகிறார். மக்கள் செய்யும் கர்மாவுக்கு ஏற்ப அவர் விளைவுகளை அளிக்கிறார். சனி பகவான் தற்போது வக்ர நிலையில், அதாவது இயல்பு நிலைக்கு எதிரான திசையில் பயணித்துக்கொண்டு இருக்கிறார். அவர் அக்டோபர் 23 ஆம் தேதி, தீபாவளி சமயத்தில் தனது இயல்பு நிலைக்கு மாறவுள்ளார். சனி பகவானின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் தாக்கம் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அபரிமிதமான நல்ல பலன்கள் எற்படும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனி இடம் உண்டு. சனி பகவானை கண்டு பொதுவாக அனைவரும் அஞ்சுவதுண்டு. சனி பகவானின் அசுப பலன்களால் நமக்கு வாழ்வில் பல வித இன்னல்கள் ஏற்படும். எனினும், சனி அசுப பலன்களை மட்டும் கொடுப்பவர் அல்ல. சனி பகவான் சுப பலன்களையும் தருகிறார். சனி பகவான் அளிக்கும் சுப பலன்களால் ஒரே இரவில் ஒருவர் உச்சத்தை தொட்டுவிட முடியும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த மாதம் நிகழவுள்ள சனி பகவானின் மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காற்று அடிக்கப்போவது நிச்சயம். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்கார்ரகளுக்கு சனி பகவானின் மாற்றத்தால் நல்ல பலன்கள் பல கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மிகம் மற்றும் சமய நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உருவாகும். பணியிடத்தில் பல வித வெற்றிகளை பெறுவீர்கள்.
மேலும் படிக்க | குருவின் சஞ்சாரத்தினால் ராஜயோகத்தை பெறும் ‘3’ ராசிகள் இவை தான்!
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு பணமும் லாபமும் அதிகரிக்கும். இதன் காரணமாக நிதி நிலை வலுவாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலம் வரப்பிரசாதம் போன்றது.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். அனத்து இடங்களிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பதவி, கௌரவம் உயரும் வாய்ப்பு உள்ளது.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலம் அதிகப்படியான பலன்களை அளிக்கப் போகிறது. இந்த நேரம் வேலை மற்றும் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மதம் மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். கௌரவம், பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | அக்டோபரில் சூரியனின் ராசி மாற்றம்: யாருக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து, இங்கே காணலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ