அக்டோபர் 16 செவ்வாய் பெயர்ச்சி: மேஷ ராசிக்கு சூப்பர்! பண வரத்தும் கெளரவமும் கூடும்

Mars Transit 2022: அக்டோபர் 16 முதல் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் கோள், 15 நாட்களுக்கு சீரான கதியில் இயங்குவார். அதன் பிறகு, அக்டோபர் 30 ஆம் தேதியன்று, செவ்வாய் கிரகம், எதிர் திசையில் நகர்வார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2022, 03:35 PM IST
  • சகிப்புத்தன்மையும் தைரியமும் அதிகரித்து முக்கிய முடிவுகளை சரியாக எடுக்கலாம்
  • வேலையில் உயர்வு பணிச்சுமை நீங்கும்
  • வாக்குவாதங்களை தவிர்த்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை நிச்சயம்
அக்டோபர் 16 செவ்வாய் பெயர்ச்சி: மேஷ ராசிக்கு சூப்பர்! பண வரத்தும் கெளரவமும் கூடும் title=

Mars Transit in Gemini: கிரகங்களின் முக்கியமான செவ்வாய் ஆற்றல் மிக்க கோள் ஆகும். கிரகங்களின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் பகவான், தற்போது இருக்கும் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 16 முதல் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் கோள், 15 நாட்களுக்கு சீரான கதியில் இயங்குவார். அதன் பிறகு, அக்டோபர் 30 ஆம் தேதியன்று, செவ்வாய் கிரகம், எதிர் திசையில் நகர்வார். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சிகள் இரண்டுமே அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. இதில் ஒவ்வொரு ராசிக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படும் சாதக பாதகங்களை விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

முதலில் மேஷ ராசியின் செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்களைப் பார்ப்போம். 

மேஷ ராசிக்கு அக்டோபர் 16ம் தேதி முதல் செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
மேஷ ராசியினருக்கு செவ்வாய் கிரகம் அவர்களின் லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார். அக்டோபர் 16, 2022 அன்று, உங்கள் ராசியிலிருந்து மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கும் போது என்ன மாற்றங்கள் நிகழும்?

வேத ஜோதிடத்தின்படி, ஜாதகத்தின் மூன்றாவது வீடு, பூர்வீகம், உடன் பிறந்தவர்கள், தைரியம், வீரம், துணிச்சல், வாக்கு மற்றும் பயணம் ஆகியவற்றுக்கான ஸ்தானம் ஆகும். எனவே, உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் செவ்வாய் இருப்பது வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அக்டோபரில் கிரகங்களின் மிகப்பெரிய ராசி மாற்றம்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் 

அக்டோபர் 16ம் தேதி ஏற்படும் செவ்வாய்ப் பெயர்ச்சியால், உங்கள் சகிப்புத்தன்மை அதிகரிக்கும், தைரியமும் கூடும். எனவே, வாழ்க்கையின் பல முக்கியமான முடிவுகளை சரியான நேரத்தில், தெளிவாக எடுக்க முடியும். குறிப்பாக உங்களின் வேலைத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைச் செயல்படுத்துவதில் சிக்கல் இருந்தால், இப்போது அதைச் செய்வதற்கான வாய்ப்பு வரும்.

சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூடுதலாக, எல்லோரும் உங்களின் பணித் திறமைக்காக பாராட்டுவார்கள். இருப்பினும், இந்த பாராட்டு என்பது, உங்கள் பணித்திறமைக்காக மட்டுமே என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பிறருடன் பேசும்போது கவனமாக இருப்பதும், விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதௌம் நல்லது. ஏனெனில் வாக்கு ஸ்தானத்தை தற்போது செவ்வாய் பெயர்ச்சி கெடுத்து, உங்களுக்கு அவப்பெயரைப் பெற்றுத் தரலாம்.

அதிர்ஷ்டம், தந்தை, குரு, மதம் போன்றவற்றின் வீடான உங்களின் ஒன்பதாம் வீட்டை, மிதுனத்தில் இருக்கும்போது செவ்வாய் பார்ப்பார். இதன் விளைவாக, பணியிடத்தில், அதிர்ஷ்ட்டத்தையும் மன திருப்தியையும் கொடுத்து, வருமானத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவார் செவ்வாய் பகவான்.

மேலும் படிக்க | புரட்டாசி பெளர்ணமி திரிக்ரஹி யோகம்! விஷ்ணுவை வணங்கினால் லட்சுமி கடாட்சம் நிச்சயம்

மாணவர்களுக்கும் இது நல்ல நேரமாக அமையும். போட்டித் தேர்வுகள் அல்லது எந்த வகையான தேர்வுக்காகவும் தயாராகும் மாணவர்களுக்கு இது உகந்த காலமாக இருக்கும். 

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிம்மதியான மற்றும் சுபமான காலமாக இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே உங்களுக்கு சொல்ல வேண்டிய அறிவுரை. கோபம் குடியை கெடுத்துவிடும் என்ற வார்த்தையை இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலத்தில் மறந்துவிட வேண்டாம். 

உடன் பிறந்தவர்களுடன் சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது, வார்த்தைகளை கோபத்தில் விட்டு விட்டால், உறவு கெடும் வாய்ப்பும் ஏற்படலாம். பதறினால் காரியம் சிதறிவிடும் என்பதால், பொறுமையுடன் உடன் பிறந்தவர்களின் கருத்துக்களைக் கேட்டு, மென்மையாக உங்கள் கருத்தை தெரிவிப்பது, தேவையில்லாத மன சங்கடங்களை தவிர்க்க உதவும்.

மேலும் படிக்க | Oct 10-16: வார ராசிபலன்! துலாம் முதல் 6 ராசிகளுக்கான பலன்கள்

செவ்வாய் கிரகத்தின் அக்டோபர் 16ம் நாள் பெயர்ச்சியால், காது அல்லது கை தொடர்பான சில பிரச்சனைகளைத் தரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்க, செவ்வாய் கிழமை நாளன்று மாதுளையை செவ்வாய் பகவானுக்கு நிவேதனம் செய்யுங்கள். முருகக் கடவுளை வணங்கினால் செவ்வாய் பகவான் மனம் மகிழ்வார்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News