தோனிக்கும் ஜடேஜாவுக்கும் மோதல் இருந்துவருவதாகக் கூறப்படும் நிலையில், சிஎஸ்கே அணியிலிருந்தே அவர் வெளியேற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பாண்டு ஐபிஎல் தொடரானது மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு மோசமான ஒன்றாகவே நடந்து முடிந்தது. வழக்கமாக எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் அவ்விரு அணிகளும் இம்முறை புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களுக்குத் தள்ளப்பட்டன. களத்தில்தான் இப்படி மோசமாக அமைந்தது என்றால் சென்னைக்கோ அணிக்குள்ளேயே பல குளறுபடிகள் நிகழ்ந்தன.


ஆரம்பமே சர்ச்சை


பல காலமாக அணியின் தூணாக  இருந்துவந்த சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காமல் சென்னை அணி புறக்கணித்தது முதல் சர்ச்சையாக வெடித்தது. ஐபிஎல் தொடர் தொடங்க ஓரிரு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், திடீரென கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் தோனி. அவருக்குப் பதிலாக புதிய கேப்டன் ஆனார் ஜடேஜா. எந்த வித அறிகுறியும் இல்லாமல் திடீரென தனது கேப்டன்சியைத் துறந்தது அடுத்த சர்ச்சையாக உருவெடுத்தது. தோனி நடப்பாண்டோடு ஐபிஎல்லில் இருந்து விலகப் போவதாகவும் அதனால்தான் கேப்டன்சியைத் துறந்ததாகவும் பேசப்பட்டது. இந்தப் பரபரப்பு எழுந்து அடங்குவதற்குள்ளாக அடுத்த சர்ச்சை ஒன்று வெடித்தது.



அதாவது ஜடேஜாவிடம் கொடுக்கப்பட்ட கேப்டன்சி அவரிடமிருந்து பிடுங்கப்பட்டு மீண்டும் தோனியிடமே கொடுக்கப்பட்டது. கேப்டன்சி பொறுப்பால் ஜடேஜாவின் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் தோனியிடமே மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தச் சர்ச்சை இத்துடன் முடியவில்லை. ஐபிஎல் தொடரின் பாதியில் சென்னை அணியிலிருந்து திடீரென விலகினார் ஜடேஜா.


ஜடேஜாவுக்குக் காயம் அதுதான் அவர் பாதியிலேயே வெளியேறக் காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால் மற்றொரு புறமோ, கேப்டன்சி பொறுப்பில் உள்ளே வெளியே கேம் நடப்பதில் ஜடேஜா கோபம் அடைந்ததாகவும் இவ்விவகாரத்தில் தோனியுடன் ஏற்பட்ட மனக்கசப்பே அவரதி விலகலுக்கான காரணம் எனச் சொல்லப்பட்டது.


இப்படியாக இந்தப் பிரச்சினை சென்றுகொண்டிருந்த நிலையில் ஐபிஎல் தொடர் நிறைவுபெற்று சர்வதேச போட்டிகள் பக்கம் தற்போது கவனம் செலுத்திவருகிறார் ஜடேஜா.



தோனியை வாழ்த்தாத ஜடேஜா


இந்நிலையில் தோனி ஜடேஜா விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இம்முறை சர்ச்சை வெடித்திருப்பது தோனியின் பிறந்த நாளையொட்டி. அதாவது சில தினங்கள் முன்பாக தோனிக்குப் பிறந்த நாள் வந்தது. இது தொடர்பாக சென்னை அணி சார்பில் வீரர்கள் அனைவரும் இணைந்து வீடியோ வடிவில் தோனிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.


ஆனால் இந்தப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இல்லை. அதுதான் அப்படி என்றால் தோனிக்கு வாழ்த்துச் சொல்லி தனியாகவும் எந்தப் பதிவுகளும் வெளியிடவில்லை ஜடேஜா. வாழ்த்துச் சொல்லாதது எல்லாம் பெரிய விஷயமா எனக் கேட்டு கடந்துவிடலாம்தான். ஆனால் அது அப்படி அல்ல.


அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் தோனியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் முந்திக்கொண்டு முதல் ஆளாக வாழ்த்துச் சொல்பவர் ஜடேஜா. இப்படியிருக்கும்போது இம்முறை வாழ்த்துச் சொல்லாதது பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.


மேலும் படிக்க | DM முதல் DK வரை.. முதல் டி-20 டீமில் இருந்த வீரர்களின் தற்போதைய நிலை- ஒரு பார்வை!



பதிவுகள் நீக்கம்


இது மட்டுமல்ல. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டு பதிவிட்ட ஐபிஎல் தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் திடீர் என நீக்கியுள்ளார் ஜடேஜா. இதுவும் இந்த விவகாரத்தை இன்னும் உற்று நோக்க வைத்துள்ளது. சென்னை அணி தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளதால் அடுத்த தொடரில் அவ்வணியிலிருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாகவும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.


சென்னை அணி உடனான ஜடேஜாவின் பயணத்துக்கு கிட்டத்தட்ட முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ள  நிலையில், ஜடேஜா தரப்பு விளக்கத்துக்காகப் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.


மேலும் படிக்க | 'விக்ரம்' பார்த்த வானதி சீனிவாசன்... கமலுக்குப் பாராட்டா, கிண்டலா... ஒன்னுமே புரியலையே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR