July 13 : உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் உலக அளவிலான கொரோனா பாதிப்பு அண்மை தகவல்கள்
புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27,28,966. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,65,351, உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,10,321.
இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,78,254 ஆகவும், அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,53,471ஆகவும், பலி எண்ணிக்கை 23,174 ஆகவும் உயர்ந்துவிட்டது.
தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,42,798 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 92,567 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48,196 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 66 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, மொத்தமாக பலி எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துவிட்டது.
கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்:
1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477
Read Also | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இராணுவ மருத்துவமனைக்குச் செல்வதற்காக, முதன்முறையாக முகக் கவசம் அணிந்து வெளியே வந்தார்
இஸ்ரேல் அரசாங்கம் கொரோனா நோய்த்தொற்றைச் எதிர்கொள்ள தவறிவிட்டதாக, டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்து போராட்டம்.
கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவைச் சுற்றியுள்ள இடங்கள், இன்று முதல் இரண்டு வாரத்திற்குத் தனிமைப்படுத்தப்பட்டன.
Read Also | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 33,04,942
2. பிரேசில் - 18,64,681
3. இந்தியா - 8,20,916
4. ரஷ்யா - 7,26,036
5. பெரு - 3,26,326
6. சிலி - 3,15,041
7. மெக்சிகோ - 2,99,750
8. இங்கிலாந்து - 2,91,154
9. ஸ்பெயின் - 2,76,242
10. இரான் - 2,57,30