கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஓகி புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் மிக மிக கன மழை பெய்யக் கூடும் எனவும், தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி போன்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
#Chennai #Kanchipuram and #Villupuram Collectors declare for whole district holiday for #schools only.
— TN SDMA (@tnsdma) December 1, 2017