புதுடெல்லி: வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வரும் போராட்டத்தில், நாளை பேரூராட்சிகள் முன் அனைவரும் திரள வேண்டும் என்று பாமக (PMK) தலைவர் ராமதாஸ் (Ramadoss) அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் சாதனைகளை நம்மால் மட்டுமே முறியடிக்க முடியும் என்பதை இப்போது வாரத்துக்கு வாரம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் (Tamil Nadu) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இம்மாதத்தின் முதல் நாளில் போராடத் தொடங்கியதிலிருந்து இன்று வரை நமது வலிமை அறவழியில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.


திசம்பர் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை சென்னையில் (Chennai) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முன் நாம் நடத்திய போராட்டங்களுக்கு (Agitation) அனைத்துத் தடைகளையும் மீறி பல்லாயிரக்கணக்கில் பாட்டாளி சொந்தங்கள் திரண்டார்கள். இந்த சாதனையை முறியடிக்க முடியுமா? என்று கேட்டால், ‘‘நிச்சயமாக முடியும்’’ என்பதை கடந்த 14-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 12,621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் நடத்தியப் போராட்டத்தில் நிரூபித்துக் காட்டினீர்கள். 


Also Read | அதிமுகவை நிராகரிக்கிறோம்! தேர்தல் பரப்புரை வீடியோவை திமுக வெளியீடு!


அந்தப் போராட்டத்தில் மட்டும் 30 லட்சத்திற்கும் கூடுதலான தம்பி, தங்கைகள் உள்ளிட்ட பாட்டாளி சொந்தங்கள் திரண்டு வந்து வன்னியர்களுக்கு (Vanniyar) தனி இட ஒதுக்கீடு (Reservation) வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினீர்கள். சரி... 30 லட்சம் பாட்டாளிகள் திரண்ட சாதனையை முறியடிக்க முடியுமா?


இம்மாதம் 23-ஆம் தேதி புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள 528 பேரூராட்சிகள் முன் நடைபெறவுள்ள மக்கள்திரள் போராட்டத்தில் இந்த சாதனையும் தகர்க்கப்பட்டு, புதிய சாதனை படைக்கப் படும்; அதைப் பார்க்கத் தயாராகுங்கள் என்று பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு போராட்டத்திலும் முந்தைய போராட்டத்தை விட கூடுதலான பாட்டாளி சொந்தங்கள் திரள்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் நமது கோரிக்கையில் உள்ள நியாயம் தான். அது தான் பாட்டாளிகளை படை திரட்டி போராட்டக் களத்திற்கு அழைத்து வருகிறது.


தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயம் வன்னியர்கள் (Vanniyar) தான். ஒரு காலத்தின் தமிழகத்தின் பல பகுதிகளை மட்டுமின்றி, அண்டை நாடுகளையும் ஆட்சி செய்தவர்கள் நமது முன்னோர்கள் தான். மிகப்பெரிய நிலவுடமை சமுதாயமாக திகழ்ந்தவர்கள் நாம் தான். ஆனால், இன்று அனைத்தையும் இழந்து கூலிக்கு வேலை செய்யும் சமுதாயமாக மாறி வருகிறோம். விவசாயக் கூலிகளாகவும், கட்டிடத் தொழிலாளர்களாகவும், வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்ப்பவர்களாகவும், வீடுகளிலும், கடைகளிலும் பாதுகாவலர்களாகவும் பஞ்சம் பிழைக்கும் நிலையில் தான் பாட்டாளி சொந்தங்கள் இன்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே  இன்று ஓலைக்குடிசைகளில் அதிகமாக வாழும் இனம் என்றால் அது நமது பாட்டாளி இனம் தான்.


கல்வியில் மிக, மிக பின்தங்கியுள்ள சமுதாயம் என்றால் அது பாட்டாளிகள் சமுதாயம் தான். அரசு வேலைவாய்ப்புகளை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருக்கும் சமுதாயமும் நாம் தான். இந்த சமுதாயத்தின் நிலையை மாற்ற வேண்டும்; மற்ற சமுதாயங்களுக்கு இணையாக கவுரவமாகவும், கண்ணியமாகவும் வாழும் நிலையை வன்னியர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம்.


Also Read | இனி ஆலயத்தில் வீற்றிருப்பார் அம்மா எனும் இதய தெய்வம் ஜெயலலிதா


1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் 21 உயிர்களை பலி கொடுத்தோம். நமது போராட்டத்தையும், நமது உணர்வுகளையும், தேவைகளையும் மதித்து நாம் கேட்ட 20% தனி இட ஒதுக்கீட்டை (Reservation) தமிழக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அன்றைய ஆட்சியாளார்கள் நமக்கு மட்டும் 20% இடஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக, கூடுதலாக 107 சாதிகளை  சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற புதிய வகுப்பை உருவாக்கி, அந்தப் பிரிவுக்கு 20%  இட ஒதுக்கீடு வழங்கினார்கள். அது நமது தேவைக்கும், நமது மக்கள் தொகைக்கும்,  நாம் செய்த தியாகத்திற்கும் ஈடானது அல்ல. யானைப் பசிக்கு சோளப்பொறியைப் போன்றது தான் அந்த இட ஒதுக்கீடு.


1989-ஆம் ஆண்டில் இழைக்கப்பட்ட துரோகத்திற்கு நியாயம் தேடும் வகையில் தான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நமது போராட்டத்திற்கு பல்வேறு சகோதர சமுதாயங்கள் தானாக முன்வந்து ஆதரவு வழங்கியுள்ளன. ஆனால், இட ஒதுக்கீட்டின் பெரும்பகுதியை இன்று வரை தடையின்றி அனுபவித்து வரும் சிலருக்கு  நமது போராட்டம் எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.


அதை பல்வேறு நிலைகளில் இருந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். நமது சமூகநீதிப் போராட்டம் குறித்து ஒவ்வொருவரும் என்ன கருத்துகளை கூறுகிறார்களோ, அதிலிருந்து அவர்கள் யார்? என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். சமூகநீதிக்கான நமது போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் சமூகநீதிக்கு எதிரான சக்திகள், இட ஒதுக்கீடு என்ற நமது உரிமை நமக்கு கிடைக்காமல் அனுபவித்து வரும் சக்திகள் கதறுகின்றன என்றால், நாம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று தான் பொருள்; நமது பயணம் தொடரட்டும்.


Also Read | ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி


நமது போராட்டத்தின் நோக்கம் நியாயமானது... சரியானது; நமது போராட்டத்தின் வலிமையை தமிழக அரசு (Tamil Nadu Government) புரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்திற்கும் கூடுதலான கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் நாம் அளித்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர்கள் வழியாக ஆட்சியாளர்களை  சென்றடைந்திருக்கக் கூடும். மனுக்கள் இப்போது தான் செல்கின்றன என்றாலும் நமது கோரிக்கைகளும், உணர்வுகளும் ஏற்கனவே அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் வன்னிய சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு இந்நேரம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்காதது வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.


ஒரு கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், அதை இன்னும் வலிமையாகவும், கூர்மையாகவும் வலியுறுத்த வேண்டும் என்பது தான் உலகளாவிய புரட்சித் தத்துவம் ஆகும். அந்த வகையில் நாமும் நமது 20% தனி இட ஒதுக்கீடு (Reservation) கோரிக்கையை அரசின் காதுகளில் இன்னும் சத்தமாக விழும்படி வலியுறுத்துவோம்.


அதற்கான போராட்டம் தான் வரும் 23-ஆம் தேதி புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் 528 பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தி, மனு கொடுக்கும் நிகழ்வு ஆகும். இந்தப் போராட்டமே 20% தனி இட ஒதுக்கீட்டிற்கான நமது இறுதி போராட்டமாக அமைய வேண்டும். 23-ஆம் தேதி போராட்டத்தின் வலிமையைப் பார்த்து நமது கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.


Also Read | Flood: பாதிப்புக்கு மத்திய அரசு ₹1000 கோடி நிதியுதவி கொடுக்கவேண்டும்- பா.ம.க


அந்த அளவுக்கு இந்த மக்கள்திரள் போராட்டத்தை வெற்றிகரமாக பாட்டாளி மக்கள் கட்சியினரும் (PMK), வன்னியர் சங்கத்தினரும், பிற அமைப்புகளும் இணைந்து நடத்த வேண்டும். தம்பிகள், தங்கைகள், இளைஞர்கள், அனைத்து அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகள் பெருந்திரளாக திரண்டு வர வேண்டும். மாற்று கட்சிகளில் உள்ள பாட்டாளி சொந்தங்கள், சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட  அனைவரையும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR