Flood: பாதிப்புக்கு மத்திய அரசு ₹1000 கோடி நிதியுதவி கொடுக்கவேண்டும்- பா.ம.க

வெள்ளத்தில் மிதக்கும் கடலூர், டெல்டா மாவட்டங்கள்: ரூ.1000 கோடி உடனடி நிதி உதவியாக மத்திய அரசு வழங்க வேண்டும்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2020, 04:40 PM IST
  • தமிழகம் தொடர்ந்து வெள்ளதால் பாதிக்கப்பட்டு வருகிறது
  • கடந்த வாரம் நிவர் என்றால் என்றால் தற்போது புரெவிப் புயல்
  • பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடி நிதியுதவி தேவை
Flood: பாதிப்புக்கு மத்திய அரசு ₹1000 கோடி நிதியுதவி கொடுக்கவேண்டும்- பா.ம.க  title=

புதுடெல்லி: வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு உடனடி நிதியுதவி வழங்க வேண்டும்என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் (Ramadoss) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு:

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் நேரடியாக தமிழகத்தைத் தாக்கவில்லை என்றாலும் கூட, அதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் பெய்து வரும் மழையால், மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூர், விழுப்புரம் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில்  எதிர்பார்க்கப்பட்டதை விட மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு & நிவாரணப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டை கடந்த நவம்பர் மாதம் அச்சுறுத்திக் கொண்டிருந்த நிவர் புயல் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தியது. புரெவி புயல் (burevi cyclone) வங்கக்கடலில் உருவான போது, அதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது; உழவர்களுக்கு நன்மை செய்யும் வகையில் மழை மட்டுமே  பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், புரெவி புயல் 40 மணி நேரத்திற்கும் மேலாக கடலிலேயே நகராமல் நிற்பதால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புயல் மையம் கொண்டிருந்த பகுதிகளை விட, காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாவட்டங்களில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read | வன்னியர் தனி இட ஒதுக்கீடு, கிராம அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு

புரெவி புயல் காரணமாக பெய்து வரும் மழையால் கடலூர் மாவட்டம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. கடலூர் அருகிலுள்ள பெருமாள் ஏரிக்கு மழையால் வரும் நீர் ஒருபுறமிருக்க, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் வந்து சேருவதால், ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியிலிருந்து வினாடிக்கு 18,000 கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இது காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப் படும் தண்ணீரை விட இரண்டு மடங்கு ஆகும். அதுமட்டுமின்றி வீராணம் ஏரி மற்றும் பல சிறிய ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும், தொடர் மழையாலும் கடலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன; அனைத்து தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வீடுகளில் வெள்ளநீர் (Flood) புகுந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான குடிசைகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 2 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி விட்டன. அடுத்தடுத்து இரு புயல்களால் தாக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் 2015-ஆம் ஆண்டின் வெள்ளத்திற்கு இணையான பாதிப்புகளை  சந்தித்து வருகிறது.

Also Read | தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை தொடரும்: IMD எச்சரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலூர் மாவட்டத்திற்கு இணையான சூழல் காணப்படுகிறது. கொள்ளிடம், சீர்காழி உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. விழுப்புரம் மாவட்டத்திலும் புரெவி புயலால் பெய்து வரும் மழையால் மக்களுக்கும், பயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் அனுப்பப் பட்டு மீட்புப் பணிகளும், நிவாரண பணிகளும் மேற்கொண்டு வருகின்றன. மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்த சில நாட்களில் நிலைமை மோசமடைவதைத் தடுக்க மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்த வேண்டும்.

சேதமடைந்த பயிர்கள், குடிசைகள், உயிரிழந்த கால்நடைகள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழும் மக்கள் கடந்த சில வாரங்களாக முற்றிலுமாக வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10,000 வழங்க வேண்டும்.

Also Read | டெல்டா பகுதிகளில் பலத்த மழையால் பெரும் பாதிப்பு: சிதம்பரம் கோயிலில் மழை நீர் புகுந்தது

தமிழ்நாட்டில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட இப்போது தான் மத்தியக் குழு வந்துள்ளது. அக்குழு  தமிழ்நாடு (Tamil Nadu) மற்றும் புதுவையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை அளித்த பிறகு தான் மத்திய அரசின் உதவி கிடைக்கும். ஆனால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு உடனடி நிதியுதவியாக ரூ.1,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News