தமிழகத்தில் டிசம்பர் 23 ஆம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல பிரச்சாரம் செல்ல உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் (DMK) தேர்தல் பரப்புரை வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது. அதில்., அ.தி.மு.க-வை (ADMK) நிராகரிக்கிறோம் ' என்ற பெயரில் திமுகவின் சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly elections) பரப்புரை வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு, நீட் தேர்வால் அனிதா மரணம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சேலம் எட்டு வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, வேலைவாய்ப்பு பிரச்சனை, விவசாயிகள் போராட்டம், ஊழல் மற்றும் லஞ்சம், மொழி திணிப்பு, சிலைகள் அவமதிப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இதற்கு எல்லாவற்றுக்கும் காரணம் தவறான நபர்களுக்கு ஓட்டுப் போடுவது தான் என்றும் ஓட்டு கடமை அல்ல உரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | திருவண்ணாமலையிலிருந்து போட்டியிடவுள்ளாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்? அவரது சகோதரர் கூறியது என்ன?
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் குறைகளை எடுத்துரைத்து தேர்தல் பரப்புரை வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது.
தேர்தல் 2021: ஒன்றிணைந்து களம் காண்போம்- மக்களிடம் செல்வோம்- வெல்வோம் - தமிழகம் மீட்போம்! https://t.co/eToBumyiCO
— M.K.Stalin (@mkstalin) December 20, 2020
இந்நிலையில் ' டிசம்பர் 23ம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) நேரடி தேர்தல பிரச்சாரம் செல்ல உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் (Durai Murugan) அறிவித்துள்ளார். டிசம்பர் 23 முதல் ஜனவரி 10 வரை 16,000 கிராம சபை கூட்டங்ளை மீண்டும் திமுக நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | 7.5% இடஒதுக்கீடு வழியாக ஒத்தடம் கொடுப்பதற்குப் பதில் உபத்திரவம்: அதிமுக அரசை சாடிய ஸ்டாலின்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR