மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் சீசன் களை கட்டியுள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனின்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கோட்டும். இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். 


மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ


இந்த ஆண்டு சீசன் தாமதமாக தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.


தற்போது கடந்த நான்கு நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் வேகமும் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் மலைப்பகுதியில் சாரல் மழை அவ்வப்போது பெய்வதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுகிறது. 


மேலும் படிக்க | 'ஒரு பேட்டரி ஏற்படுத்திய பேரழிவு' - பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை!


மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலம் அருவியில் சுமாராக தண்ணீர் விழுகிறது. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


மேலும் படிக்க | தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை துன்புறுத்திய காவலர்கள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ