Realme அசத்தும் பட்ஜெட் போன் அறிமுகம்: விலை, பிற விவரங்கள் இதோ
ரியல்மீ தனது சி தொடரின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனான C21Y-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சங்களைப் பற்றி இங்கே காணலாம்.
Realme Phone Launch: ரியல்மீ தனது சி தொடரின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போனான C21Y-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Realme சி தொடரின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனில் மெலிதான பெசல்கள், டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் போன்ற சிறந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த லேட்டஸ்ட் Realme தொலைபேசியின் விலை மற்றும் அனைத்து விவரக்குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொலைபேசியின் விலை
இந்த தொலைபேசியின் இரண்டு வண்ண வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று Black Caro, மற்றொன்று Caramel Green. இந்த ரியல்மீ தொலைபேசியின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை VDN 3,240,000 (சுமார் ரூ .10,500) ஆகும். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை VDN 3,710,000 (சுமார் ரூ .12,000) ஆகும்.
Realme C21Y-இன் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
720x1600 பிக்சல் தெளிவுத்திறனுடன் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே கொண்ட இந்த ரியல்மீ (Realme) போன், 88.7 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் வருகிறது. இந்த தொலைபேசியில், நிறுவனம் Mali-G52 GPU-யுடன் ஆக்டா கோர் Unisoc T610 SoC சிப்செட்டை வழங்குகிறது.
ALSO READ: செம்ம பேட்டரி பேக்கப்; Realme மாஸ் ஸ்மார்ட் வாட்ச் விரைவில் அறிமுகம்
பிராசசர், ரேம் மற்றும் சேமிப்பு
வேகம் மற்றும் பல்பணிக்கு, ஆக்டோ-கோர் Unisoc T610 SoC உடன், கிராஃபிக்சுக்கு மாலி-ஜி 52 ஜீபியு-வும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் (Mobile Phone) 4 ஜிபி வரை LPDDR4x ரேம் மற்றும் 64 ஜிபி வரை உள் சேமிப்பு உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் சேமிப்பிடத்தை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேமரா
தொலைபேசியின் பின்புற பேனலில் மூன்று பின்புற கேமராக்கள் (Mobile Camera) வழங்கப்பட்டுள்ளன. 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் கருப்பு மற்றும் வெள்ளை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா சென்சார் ஆகியவை இதில் உள்ளன. செல்பிக்காக தொலைபேசியின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசியின் பேட்டரி
பின்புற கைரேகை ஸ்கேனருடன் பொருத்தப்பட்ட இந்த தொலைபேசியில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது ரிவர்ஸ் வயர்ட் சார்ஜிங்கிற்கும் ஆதரவு அளிக்கின்றது. இணைப்பு வசதிக்கு, எல்.டி.இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஹெட்போன் போன்ற பல வசதிகள் தொலைபேசியில் கொடுக்கப்பட்டுள்ளன. தொலைபேசியில் சார்ஜ் செய்ய மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளது.
ALSO READ: Samsung Galaxy F22: துவங்கியது விற்பனை, இந்த வழியில் 10% தள்ளுபடி பெறலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR