Realme Days Sale: அட்டகாச விலையில் கிடைக்கிறது லேட்டஸ்ட் போன், விவரம் இதோ

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. Realme Narzo 30A கவர்ச்சிகரமான விலையில் தற்போது கிடைக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 8, 2021, 04:24 PM IST
  • கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது Realme Narzo 30A.
  • Realme Days Sale-ல் மிக மலிவான விலையில் போனை வாங்கலாம்.
  • இந்த தொலைபேசியில் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 செயலி பொருத்தப்பட்டுள்ளது.
Realme Days Sale: அட்டகாச விலையில் கிடைக்கிறது லேட்டஸ்ட் போன், விவரம் இதோ title=

Realme Narzo 30A: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. Realme Narzo 30A கவர்ச்சிகரமான விலையில் தற்போது கிடைக்கிறது. 

Realme Days Sale மூலம், நீங்கள் இந்த தொலைபேசியை மிகவும் மலிவான விலையில் வாங்கலாம். இந்த தொலைபேசி பல அட்டகாச அம்சங்களைக் கொண்டுள்ளது. 

தொலைபேசியின் முதன்மை கேமரா 13 மெகாபிக்சல்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மேலும் சிறப்பாக இருக்கும். இந்த தொலைபேசியின் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

தொலைபேசி விலை

Realme Days Sale-ல், இந்த தொலைபேசி வெறும் ரூ .8,499 க்கு வாங்கலாம். இப்படிப்பட்ட சலுகைகள் அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசியின் விவரக்குறிப்புகள்

Realme Narzo 30A ஸ்மார்ட்போனில் (Smartphone) 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. இது 720x1600 பிக்சல்கள் ரெசல்யூஷனைக் கொண்டுள்ளது. 

ALSO READ: OnePlus Nord 2 5G: அற்புதமான அம்சங்கள்; விரைவில் இந்தியாவில் அறிமுகம்

இந்த தொலைபேசியில் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 செயலி பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் Android 10 இயக்க முறைமையில் இயங்குகிறது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு வசதிகள்

Realme Narzo 30A தொலைபேசியில் கூடுதல் திறனுக்கு 6000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. 

இணைப்பு வசதிக்கு (Connectivity) 4G LTE, வைஃபை, புளூடூத் v5.0, GPS/A-GPS மற்றும் டைப் சி போர்ட் போன்ற அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக தொலைபேசியில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா 

புகைப்படம் எடுப்பதற்கு, இந்த தொலைபேசியில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 13 மெகாபிக்சல்கள் மற்றும்  எஃப் / 2.2  அபர்சர் அதாவது துளை அளவிக் கொண்டுள்ளது. இதனுடன் போர்டட் கேமரா சென்சார் உள்ளது. (அபர்சர் எஃப் / 2.4). செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்கு 8 மெகாபிக்சல் கொண்ட முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ: Tecno Spark Go 2021 இன்று முதல் விற்பனை; பல அசத்தலான ஆபர் அறிவிப்பு

ALSO READ: மொபைல் திரையை பாதுகாக்கும் Screen Guard உங்கள் மொபைலுக்கு சேதத்தையும் ஏற்படுத்தலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News