எலெக்ட்ரிக் வாகனங்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை பல தீ விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, ரெட்மி 6A இல் வெடித்ததில் ஒரு பெண் இறந்தார். அதேபோல, பரேலியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் போன் வெடித்ததில் உயிரிழந்தார். தற்போது சியோமியின் மற்றொரு போன் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. Redmi Note 11T Pro வெடித்ததால் யாரும் இறக்கவில்லை, ஆனால், விபத்துக்குக் பிறகு வெடித்த போனின் தோற்றம்  தொடர்பான வீடியோ வைரலானது.  ரெட்மி நோட் 11டி ப்ரோவின் பேட்டரி வெடித்த சம்பவம் சீனாவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தியாவில், இந்த போன் Redmi K50i என மறுபெயரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்டாக்கில் பகிரப்பட்ட வீடியோவில், தொலைபேசியின் திரை மற்றும் பின் பேனல் முற்றிலும் சேதமடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைக் கண்ணாடிகள் உடைந்துள்ளன. அதே நேரத்தில், பின் பேனலில் உள்ள கேமரா தொகுதியின் சில பகுதியைத் தவிர அனைத்தும் எரிந்து போய்விட்டன. கடந்த ஆண்டு, OnePlus Nord 2 ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவங்கள் நடந்தன. அதன் பிறகு நிறுவனம் பல பயனர்களுக்கு இழப்பீடு வழங்கியது. 



ஒவ்வொரு முறையும் ஸ்மார்ட்போன் வெடிக்கும் போது, ​​அது சாதனம் தயாரிப்பாளரின் தவறு அல்ல. பல நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் பயனாளர்களின் தவறுகளால் வெடித்துச் சிதறுகின்றன.


மேலும் படிக்க  | ஆதார் தரவுகளை பாதுகாக்க பயோமெட்ரிக்சை 'லாக்' செய்தால் போதும்: முழு செயல்முறை இதோ


போனில் தீப்பிடித்ததற்கு முக்கிய காரணம்
பெரும்பாலான செல்போன் வெடிப்பு சம்பவங்கள் போனை சார்ஜ் செய்யும் போது ஏற்படும் தவறுகளால் நிகழ்கின்றன. ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனை நீண்ட நேரம் சார்ஜ் செய்வதால், போனின் பேட்டரி சூடாகி விடுகிறது. இதனால் பேட்டரி வெடித்துவிடும். பொதுவாக, மக்கள் இரவில் போனை சார்ஜ் செய்து விடுகிறார்கள், இதனால் போன் அதிக சூடாகி வெடிக்கும்.


ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற எந்த எலக்ட்ரானிக் சாதனத்திலும் இணக்கமான சார்ஜரைப் பயன்படுத்தாமல் போனால், போனில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்துவிடும். பல நேரங்களில் பயனர்கள் தங்கள் மொபைல் ஃபோனின் அசல் சார்ஜருக்குப் பதிலாக வேறு சில தொலைபேசிகளின் சார்ஜரைக் கொண்டு சார்ஜ் செய்கிறார்கள். இதனால் பேட்டரி அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.


மேலும் படிக்க | மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரோபோ நியமனம்


பல முறை மொபைல் ஃபோனின் சார்ஜிங் போர்ட் மற்றும் சார்ஜர் ஆகியவை ஈரமான இடத்தில் வைக்கப்படுகின்றன. இதனால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு முன், சார்ஜிங் போர்ட்டில் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். இது, போனில் எலக்ட்ரானிக் ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதை தடுக்க உதவும். 


பேட்டரியை 80 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் பேட்டரி சேதமடையும். மேலும், போனின் பின் பேனல் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கிறது.


மேலும் படிக்க |  ஆதார் எண் - போலி சிம் கார்டுகள் மோசடி; கண்டறியும் எளிய முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ